Aran Sei

ஆறு மாதத்தில் பதவியை இழக்கும் மம்தா பானர்ஜி – சட்டமன்ற இடைதேர்தலை உடனே நடத்த மேற்கு வங்க அரசு வலியுறுத்தல்

மேற்கு வங்க மாநிலத்தில் நிலுவையில் உள்ள இடைத்தேர்தல்களை விரைவாக நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ள மாநில அரசு, தேர்தலின் போது அனைத்து கொரோனா தடுப்பு நெறிமுறைகளும் பின்பற்றப்படும் என்றும் உறுதியளித்துள்ளது.

தேர்தல் நடைபெறவிருக்கும் ஏழு தொகுதிகளில், நந்திகிராமில் தோல்வியை எதிர்கொண்ட முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பவானிபூர் தொகுதியில் போட்டியிடக்கூடும் என்ற ஊகங்களால், அத்தொகுதி அதிக கவனம் பெறுகிறது.

இக்காலக்கட்டத்தில் காலியாக உள்ள இரண்டு மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலை நிறுத்தி வைக்கும் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு பதிலளிக்கும் வகையில், நேற்று (ஜூலை 2) மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு கடிதம் எழுதியுள்ளது.

அரண்செய் சிறப்பிதழ் – ஏழு தமிழர் விடுதலை

அக்கடிதத்தில், நாங்கள் முழுமையான பாதுகாப்பு ஏற்பாடு செய்து தருவதாக உறுதியளித்துள்ளது. மேலும், ஏழு சட்டசபை இடைத்தேர்தல்களை விரைவில் நடத்துமாறும் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளது.

தனது முதலமைச்சர் பதவியை தக்க வைத்துக் கொள்ள ஆறு மாதங்களுக்குள் மம்தா பானர்ஜி சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டாக வேண்டும். இதுகுறித்து, ஜூன் 23 ஆம் தேதி, செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நாட்டில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் இருப்பதால், நடைபெறவிருக்கும் இடைத்தேர்தல்கள் ஏழு நாட்களுக்குள் நடத்தலாம் என்று கூறியிருந்தார்.

Source; pti

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்