Aran Sei

விடுதலைப் போராட்டத்தில் நேதாஜியின் செயல்பாட்டை பாடத்திட்டத்தில் சேர்க்க பரிந்துரை – மேற்கு வங்க அரசு முடிவு

சிங்கப்பூர் சென்ற நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் சுதந்திர இந்தியாவின் கனவை நனவாக்கும் முயற்சியை பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்க பாடத்திட்டக் குழுவுக்கு மேற்கு வங்க அரசு பரிந்துரை செய்யும் என்று அம்மாநில கல்வி அமைச்சர் பிரத்யா பாசு தெரிவித்துள்ளார்.

இதுவரை கிடைக்கப்பெற்ற பதிவின்படி, 1943ஆம் ஆண்டு ஜூலை மாதம் சிங்கப்பூர் சென்ற நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஆங்கிலேயே ஆட்சியில் இருந்து விடுதலைப் பெற்ற சுதந்திர இந்தியா என்ற கனவை நனவாக்க, தனது இந்திய தேசிய இராணுவத்தைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளைச் செய்தார்.

நேதாஜி பெயரிலான குடியரசு தின அணிவகுப்பு வாகனம் நிராகரிப்பு – ஒன்றிய அரசுக்கும் மம்தா பானர்ஜிக்கு வலுக்கும் மோதல்

1943 இல் நேதாஜியின் சிங்கப்பூர் பயணம் தொடர்பான நிகழ்வுகளை வங்கத்தில் உள்ள புதிய தலைமுறையினர் விரிவாக அறிந்து கொள்ள வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் வலியுறுத்தியது குறித்து பிரத்யா பாசுவிடம் கருத்து கேட்டபோது, ​​ “ஆம். 1943 இல் நேதாஜி தொடர்பாக உள்ள நிகழ்வுகளை தொகுத்து பாடமாக்க பாடத்திட்டக் குழுவிற்கு மேற்கு வங்க அரசாங்கம் பரிந்துரைக்கும்” என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக, கூடுதல் தகவல்களை அவர் தெரிவிக்கவில்லை.

அதைத்தொடர்ந்து, குணால் கோஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “நேதாஜி மற்றும் அவரது அரசாங்கம் (சிங்கப்பூரில்) பற்றிய விவரங்களைச் சேர்க்குமாறு பாடத்திட்டக் குழுவிற்கு மாண்புமிகு பிரத்யா பாசு பரிந்துரை செய்ததை நாங்கள் வரவேற்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

அனைத்து மதங்களும் அமைதியாக வாழும் இந்தியாவைத்தான் நேதாஜி கனவு கண்டார் – நேதாஜி மகள் கருத்து

இது, இந்திய சுதந்திர போராட்டத்தின் ஒரு பகுதியாக சிங்கப்பூரில் நேதாஜியின் பணியை அங்கீகரிப்பதற்கான முதல் படியாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில், டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்புக்கான மேற்கு வங்கத்தின் வாகனம் ஒன்றிய அரசால் நிராகரிக்கப்பட்டது. இவ்வாகனம் இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பங்களிப்பை முதன்மைப் பொருளாகக் கொண்டது என்று மேற்கு வங்க அரசு கூறியது.

இந்நிராகரிப்பை அடுத்து ஒன்றிய அரசுக்கும் மேற்கு வங்க அரசுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்