Aran Sei

மார்ச் 28, 29 அன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் – மேற்குவங்க அரசு எச்சரிக்கை

மார்ச் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெறும் 48 மணிநேர நாடு தழுவிய வேலைநிறுத்தத்தின்போது பணிக்கு தவறாமல் வர வேண்டும் என்று அனைத்து அரசு ஊழியர்களுக்கும் மேற்கு வங்கத்தின் திரிணாமூல் காங்கிரஸ் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

தவறும்பட்சத்தில், அந்த ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் உடற்பிணி அல்லது குடும்பத்தில் ஏற்பட்ட இறப்பு போன்ற அவசரகால சூழ்நிலைகளைத் தவிர ஊழியர்களுக்கு சாதாரண விடுப்பு வழங்கப்படாது என்றும் அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, மேற்கு வங்க மாநிலச் செயலர் நபன்னா வெளியிட்ட அறிவிப்பில், அனுமதியின்றி இரண்டு நாட்களோ  அல்லது ஏதோவொரு நாளோ பணிக்கு வராத ஊழியர்களிடம் விளக்கம் கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 28, 29 அன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்- தமிழ்நாடு அரசு எச்சரிக்கை

கட்சியின் அதிகாரப்பூர்வ கொள்கைகளுக்கு வேலைநிறுத்தங்கள் எதிரானது என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இடதுசாரி கட்சிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்கங்கள் உட்பட பல தொழிற்சங்கங்கள் ஒன்றிய அரசின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக இரண்டு நாள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்