Aran Sei

‘மேற்கு வங்க வன்முறை; அரசால் நிகழ்த்தப்பட்ட பழிவாங்கல்’ – விளக்கமளிக்க தலைமைச் செயலாளருக்கு ஆளுநர் உத்தரவு

மேற்கு வங்கத்தில் நடந்த தேர்தலுக்குப் பிந்தைய வன்முறையை சுட்டிக்காட்டி, மாநிலத்தின் சட்டம், ஒழுங்கு நிலைமை குறித்து மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கர் கவலை தெரித்துள்ளார். மேலும், இதுகுறித்து விளக்கமளிக்க தலைமைச் செயலாளரை அவர் உத்தரவிட்டுள்ளனர்.

இதுதொடர்பான அறிக்கையைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஜகதீப் தங்கர், “மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், சட்டம், ஒழுங்கு நிலைமை இங்கு நிலவுகிறது. மாநிலத்தின் பாதுகாப்பு சூழல் சமரசத்திற்கு உள்ளாக்கப்படுகிறது. இத்தகைய மோசமான சட்டம் ஒழுங்கு நிலைமைகுறித்து, ஜூன் 7 அன்று எனக்கு விளக்கமளிக்க தலைமைச் செயலாளரை அழைப்பதோடு, தேர்தலுக்குப் பிந்தைய வன்முறைகளைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் பட்டியலிட உத்தரவிட்டுள்ளேன்.” என்று தெரிவித்துள்ளார்.

‘மேற்குவங்க கலவரத்தில் சூரையாடப்பட்ட தலித், பழங்குடிகளை மீளக்குடியமர்த்த வேண்டும்’ – குடியரசுத் தலைவருக்கு கல்வியாளர்கள் கடிதம்

மற்றொரு ட்வீட்டில், “கெடுவாய்ப்பாக, மேற்கு வங்க காவல்துறையும் கல்கத்தா காவல்துறையும் தனது அரசியல் எதிரிகளை பழிவாங்க, ஆளும் அரசால் நிர்பந்திக்கப்பட்டுள்ளன. முன்னெப்போதும் நிக்ழந்திராத இதுபோலான வாக்கெடுப்புக்குப் பிந்தைய பழிவாங்கும் வன்முறையானது கற்பனை செய்யமுடியாத அளவில் அரசின் கண்காணிப்பில் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். நூற்றுக்கணக்கான கோடி மதிப்பில்லான சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன.” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஆளும் திரிணாமூல் காங்கிரஸ், “பாரதிய ஜனதா கட்சியின் செயற்பாடுகளின் தொடர்ச்சியாக ஆளுநரில் இந்த அறிக்கை உள்ளது என்றும் உண்மையில் எதிர்க்கட்சி தலைவர் ஆளுநர்தான் என்றும் விமர்சித்துள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்