Aran Sei

‘உத்தரபிரதேசம் ஹத்ராஸில் பெண்கள் சித்திரவதைக்கு உள்ளானபோது அமித்ஷா ஏன் பேசாதிருந்தார்’ – மம்தா பானர்ஜி

பாஜக ஆளும் உத்தரபிரதேசத்தில் பெண்கள் சித்திரவதைக்கு உள்ளான போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏன் அமைதி காத்தார் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த மாதம் மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் நிம்தா பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், அதில் ​ பாஜக ஊழியர் ஒருவரின் 82 வயது தாய் கொல்லப்பட்டதாகவும் பாஜக குற்றம் சாட்டியது.

இந்நிலையில், இது தொடர்பாக, நேற்று (மார்ச் 29), நந்திகிராமில் நடந்த பரப்புரை கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி,  “அந்த சகோதரி எப்படி இறந்தார் என்று எனக்குத் தெரியவில்லை. எங்களுடைய சகோதரிகள் மற்றும் தாய்மார்களுக்கு எதிரான வன்முறையை நாங்கள் ஒருபோதும் ஆதரிக்கவில்லை. ஆனால் பாஜக இப்போது இந்த பிரச்சினையை அரசியலாக்குகிறது.” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கு – நடப்பது என்ன?

“அமித் ஷா தன்னுடைய ட்வீட்டில் ‘பெங்கால் கா க்யா ஹால்’ என்று கூறுகிறார். உத்தரபிரதேச ஹத்ராஸில் பெண்கள் மிருகத்தனமாக தாக்கப்பட்டபோது அவர் ஏன் பேசாதிருந்தார்? உத்தரபிரதேச மாநிலத்தில் பெண்கள் சித்திரவதைக்கு உள்ளாவது குறித்து ஏன் பேசாதிருக்கிறார்?” என்று மம்தா பானர்ஜி கேள்விகளை எழுப்பியுள்ளார்.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்