Aran Sei

கழிவுகளை அகற்றும் பணியில் 1993 லிருந்து தற்போதுவரை 917 பேர் உயிரிழப்பு – 214 இறப்புகளுடன் தமிழ்நாடு முதலிடம்

ந்தியாவில் 1993 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை கழிவுகளை அகற்றும் பணியின் போது 917 தொழிலாளர்கள் இருந்துள்ளதாக மாநிலங்களவையில் ஒன்றிய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட இந்தியப் பணக்காரர்களின் தரவரிசை – முதலிடத்தில் அம்பானி இரண்டாம் இடத்தில் அதானி

கழிவுகளை அகற்றும் பணியின் போது அதிக மரணங்கள் நடந்த மாநிலங்களில் 214 இறப்புகளுடன் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என்று பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சையத் ஜாபர் இஸ்லாம் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்துள்ளார்.

மேலும் அதில், “குஜராத் மாநிலத்தில் 156 மரணங்கள் மற்றும் உத்திரபிரதேசம் 106 மரணங்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.இதுவரை கழிவுகளை அகற்றும் போது உயிரிழந்த 703 பேரின் குடும்பங்களுக்கு இழப்பீடாக 10 லட்சம் ரூபாயும், மரணமடைந்த 136 பேரின் குடும்பங்களுக்கு 10 லட்சத்துக்கும் குறைவான இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளது” என்று இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம்: சைவ பிரியாணி விற்ற இஸ்லாமியரை தாக்கிய இந்துத்துவாவினர் – இஸ்லாமிய வெறுப்பே காரணமென பத்திரிகையாளர் கருத்து

“மனிதக் கழிவு அகற்றுவோர் என்று அழைக்கப்படும் மனித கழிவுகளை நேரடியாக அகற்றும் தொழிலை 1993 ஆண்டிலேயே இந்தியா தடை செய்துள்ளது. ஆகவே மனிதக் கழிவு அகற்றுவோர் யாரும் அதன் பின்பு உயிரிழக்கவில்லை என்றும், கழிவுகளை அபாயகரமான முறையில் சுத்தம் செய்யும் போது ஏற்பட்ட விபத்துக்கள் காரணமாக தான் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன” என்று ஒன்றிய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

Source : The Hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்