Aran Sei

பாஜக வேட்பாளர் காலில் விழுந்து வணங்கிய பொதுமக்கள்: காலில் விழுவது இந்திய கலாச்சாரம் – முதல்வர் வேட்பாளர் சர்ச்சை பேச்சு

”இந்தியாவின் பாராம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் குறை கூறுபவர்களை, இந்தியர்கள் என்று அழைக்கலாமா ? ” என்று கேரள பாஜகவின் முதல்வர் வேட்பாளர் ஸ்ரீதரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம், கேரள பாஜகவின் முதல்வர் வேட்பாளராக மெட்ரோமேன் இ.ஸ்ரீதரன் அறிவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் பாலக்காடு தொகுதியில், தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார் அந்தப் பிரச்சாரத்தின்போது, பொதுமக்கள் (வாக்காளர்கள்) ஸ்ரீதரனுடைய காலில் விழுந்து வணங்கியும், அவருடைய பாதங்களைக் கழுவியும் அவரை வரவேற்றனர்.

பாலக்காடு தொகுதி மக்கள், ஸ்ரீதரன் காலில் விழுந்து வணங்கும் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, பாஜக வேட்பாளர் ஸ்ரீதரன் கடும் விமர்சனங்களைச் சந்தித்தார்.

’கேரள, தமிழக தேர்தலில் தோற்றால் பாஜக-வின் கொட்டம் அடங்கும்’ – ப.சிதம்பரம்

இந்தச் சர்ச்சைக்குப் பதிலளித்துள்ள ஸ்ரீதரன், சமூக வலைதளங்களில் வைரலான புகைப்படங்கள் வாக்காளர்கள் தன்னை பாராம்பரிய முறையில் வரவேற்றப் போது எடுக்கப்பட்ட படங்கள் என்று கூறியுள்ளார். மேலும், “ இது தான் இந்தியக் கலாச்சாரம். இதில் என்ன தவறு உள்ளது ? அவர்கள் ( காலில் விழுந்தவர்கள் ) என்னைத் தரிசிக்கவில்லை, தங்களுடைய மரியாதையை வெளிப்படுத்துகின்றனர்” என்று கூறியுள்ளார்.

‘தலைகீழாக தொங்கவிட்டாலும் எம்மக்களுக்கு துரோகமிழைக்க மாட்டேன்’ – பாஜக சார்பாக போட்டியிட மறுத்த பேராசிரியர்

ஸ்ரீதரனுடைய கருத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பினாய் விஷ்வம், ”அவர் இதை (காலில் விழுவது, காலைக் கழுவுவது) இந்திய கலாச்சாரம் என்கிறார். பாரதிய ஜனதா கட்சி, நமது நாட்டையும், அரசியலமைப்பையும், ஜனநாயக மதிப்புகளையும் எந்தப் பாதையில் கொண்டு செல்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு” என்று தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களை எதிரியாக்கி இந்து வாக்குகளை ஒருங்கிணைக்கும் பாஜக – : பத்ருத்தின் அஜ்மல்

மேலும், ”இந்தியா, நவீன தொழிற்நுட்பத்தின் வழிகாட்டியாக மெட்ரோமேன் ஸ்ரீதரை பார்த்தது. ஆனால் அவர் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸின் அரசியல் சிறையில் சிக்கிய பின் மாறிவிட்டார்” என்றும் கூறியுள்ளார்.

நீதி குறித்து கேரளாவிற்கு பாடம் எடுக்காதீர்கள் அமித்ஷா – பினராயி விஜயன் பதிலடி

இது போன்ற கண்டனங்களுக்குப் பதிலளித்துள்ள ஸ்ரீதரன், ” இது போன்ற நடவடிக்கைகளில்ச்(காலில் விழுவது, காலை கழுவுவது), எந்தத் தவறும் இல்லை. நாம் ஒருவருக்கு வணக்கம் சொல்லுவதில் ஏதெனும் தவறு உள்ளதா? அங்கிருந்த குழந்தைகள், தங்களுடைய மரியாதையை என்னிடம் செலுத்தினர். இந்தியாவின் பாராம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் குறை கூறுபவர்களை, இந்தியர்கள் என்று அழைக்கலாமா? என்று பதில் கேள்வியெழுப்பியுள்ளார்.

SOURCE : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்