Aran Sei

மேற்கு வங்கம்: சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு – மம்தாவின் கருத்துக்கு எதிர்க்கட்சியினர் கண்டனம்

Credit: The Wire

மேற்குவங்கத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சிறுமி கற்பழிக்கப்பட்டாரா அல்லது கர்ப்பமாக இருந்தாரா  என்று கேள்வி எழுப்பிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி; உயிரிழந்த சிறுமி காதலில் இருந்தார் என்று பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

வங்காளத்தின் நாடியா மாவட்டத்தின் ஹன்ஸ்காலியில் 9 வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரமுகரின் 21 வயது மகன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின் பெயரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஏபிவிபி தலைவர் மீது பாலியல் வழக்கு: பிணை கிடைத்ததை ‘பையா இஸ் பேக்’ என சுவரொட்டி ஒட்டி கொண்டாடியதை கேள்வியெழுப்பிய உச்சநீதிமன்றம்

இச்சம்பவம் குறித்துப் பேசிய மம்தா பானர்ஜி”கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சிறுமி கற்பழிக்கப்பட்டாரா அல்லது கர்ப்பமாக இருந்தாரா அல்லது காதல் விவகாரத்தில் இருந்தாரா அல்லது நோய் வாய்ப்பட்டிருந்தாரா என்பதை எப்படி அறிவது? அது காதல் என்று குடும்பத்தினருக்கும் தெரியும். ஒரு ஜோடி உறவில் இருந்தால், நான் அவர்களை எப்படி நிறுத்துவது? லவ் ஜிஹாத் என்ற பெயரில் நான் அதை செய்ய இது உ.பி அல்ல. சிறுமியின் குடும்பத்தினர் சிறுமியின் உடலை எரித்து இறுதிச் சடங்குகளைச் செய்தீர்கள். நான் ஒரு சாமானியனாக பேசுகிறேன். அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா அல்லது கர்ப்பமாக இருந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது உள்ளிட்ட ஆதாரங்களை காவல்துறை எங்கிருந்து பெறுவார்கள் ” என்று மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

காவல்துறை தலைமை இயக்குநரிடம் நான் பேசியது சரிதானா என்று ஒரு முறை கேட்டுக் கொண்டார்.

பீகார்: மசூதி மேல் காவிக்கொடியை ஏற்றி ராமநவமி கொண்டாடிய வலதுசாரியினர்

5 ஆம் தேதி சிறுமி உயிரிழந்த நிலையில், 10 தேதி புகார் அளிக்கப்பட்டது என்பதை சுட்டிக்காட்டிய மம்தா, மரணத்தில் சந்தேகம் இருந்தால், ஏன் 10 தேதிவரை காத்திருந்திருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சிறுமியின் உடல் காவல்துறையினருக்கு தெரியாமல் அடக்கம் செய்யப்பட்டிருப்பது குறித்து பேசிய மம்தா, “காவல்துறை எப்படி விசாரிக்கும் முடியும்?” என்று கூறியுள்ளார்.

”அந்த சிறுமிக்கு காதல் விவகாரம் இருந்துள்ளது. இது அவரது குடும்பத்தினருக்கு தெரிந்துள்ளது. அக்கப்பக்கத்தினருக்கும் இந்த விவகாரம் தெரியும். ஒரு ஆணு பெண்ணும் காதலித்தால், அதை என்னால் தடுத்துக் கொண்டிருக்க முடியாது. இது உத்திரபிரதேசம் அல்ல, நான் லவ் ஜிகாத் முழக்கத்தைக் கையில் எடுக்க” என்று மம்தா தெரிவித்துள்ளார்.

மம்தா, அவரது பேச்சின் வாயிலாக குற்றம் சாட்டப்பட்டவரும் பாதிக்கப்பட்டவரும்  ஒருவருக்கு ஒருவர் பரிட்சயமாக இருந்தார்கள் என்பதை அவர் தொடர்ந்து நிறுவ முயன்றார்.

ஜார்கண்ட் ராமநவமி ஊர்வலத்தில் கலவரம் – ஒருவர் உயிரிழப்பு; இணைய சேவை முடக்கம்

குற்றம்சாட்டப்பட்டவரின் தந்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்பதை தொடர்பான எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகுறித்து பேசிய மம்தா, ”எல்லாரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைக் குறித்து ஏன் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெயரை இழுப்பதால் என்ன பயன்?. இந்த மாநிலத்தில் அனைவரும் திரிணாமுல் கட்சியினர் தான். தந்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவராக இருந்து அவரது மகன் ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்தால், அதற்குக் கட்சி பொறுப்பாகுமா?” என்று மம்தா தெரிவித்துள்ளார்.

பாலியல் வழக்குகளில் இது போன்ற கருத்துக்களை மம்தா பானர்ஜி பேசியிருந்தப்பது இது முதல்முறை அல்ல. 2015 ஆண்டு கொல்கத்தாவின் பார்க் சாலையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடைபெற்றது போது, அது புனையப்பட்ட வழக்கு. குற்றசாட்டப்பட்டவருக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் பழக்கம் இருந்துள்ளது, அது தவறாக சென்று விட்டது என்று பேசியிருந்தார். இதற்கு அப்போதே கடும் கண்டங்கள் எழுந்தன.

பெண்களை மையப்படுத்தி, பெண்கள் உரிமைகளை முன்னிறுத்துவதாக சொல்லிக்கொள்ளும் ஒரு அரசாங்கம், தனது மக்களை அரசு ஏமாற்றி விட்டதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி, “பாதிக்கப்பட்டவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மா, மாதி, மனுஷ் (தாய், நிலம், மக்கள்) ஆட்சியின் கீழ் வரவில்லையா? பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞராக மம்தா ஏன் வாதிடுகிறார். குற்றம் செய்தவர்களை ஏன் அவர் பாதுகாக்கிறார்.” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

‘இஸ்லாமியர்களை நிம்மதியாகவும் மரியாதையுடனும் வாழவிடுங்கள்’ – எடியூரப்பா

மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சுஜன் சக்கிரவர்த்தி அவரது ட்விட்டர் பக்கத்தில், “ஹன்ஸ்கலி சம்பவத்தை உத்திரபிரதேசத்தின் ஹத்ராஸுடன் ஒப்பிட்டு, பாலியல் வன்கொடுமை செய்தவர்களின் காவலாளியாக மம்தா மாறிவிட்டார்” என்று பதிவிட்டுள்ளார்.

மேற்கு வங்க சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் சுவேந்த் அதிகாரி, ”முதலமைச்சர் பேசிய மொழியைப் பாருங்கள்?. நடப்பது சட்டத்தின் ஆட்சியல்ல. யாருக்கு வாக்களித்தோம் என்பதை மக்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Source: The Wire

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு துணிச்சல் மிக்க தமிழன்..

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் சங்கத்தமிழன்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்