Aran Sei

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்: உளவியல் சிக்கலால் அவதியுறும் குழந்தைகள்

பாலஸ்தீனத்தின் காசாப் பகுதி மீது இஸ்ரேல் நடத்திய 11 நாள் தாக்குதலால் அங்குள்ள குழந்தைகள் மனதளவில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும், அதிலிருந்து குழந்தைகளை மீட்க உளவியலாளர்களும், குழந்தைகளின் தாய்மார்களும் உழைத்து வருவதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள வடக்கு காசாவின் பெய்ட் ஹானோன் பகுதியைச் சார்ந்த ஹலா ஷிஹதா, இந்த மாதம் இஸ்ரேல் நடத்தியத் தாக்குதல் கடந்த 2014 ஆம் நடந்த தாக்குதலை நினைவுக்கு கொண்டுவருவதாகவும் தெரிவித்துள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.

போர்நிறுத்தத்தை இஸ்ரேலும் பாலஸ்தீனமும் முழுமையாக கடைபிடிக்க வேண்டும் – ஐ.நா சபையின் பாதுகாப்புக்குழு வேண்டுகோள்

மேலும்,”போர் என்பது உலகின் மிக அசிங்கமான விஷயம். உண்மையான போர் என்பது நீங்கள் அந்த நினைவுகளுடன் நீங்கள் வாழ வேண்டும் என்பதே” என்று கூறியுள்ளதாகவும், 2014 ஆம் ஆண்டு நடந்த தாக்குதலில் அவர் கணவர் இறந்ததாகவும் அல் ஜசீரா செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, போரினால் தன் குழந்தை பாதிக்கப்பட்டுள்ளதை குறித்து தெரிவித்த ஷிஹதா,”என் குழந்தை துன்புறும் போது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது. அதே போன்று எத்தனை குழந்தைகள் போரினால் தங்கள் வாழ்நாளில் துன்பப்படுவர்கள் என்று சிந்திக்கிறேன்” என்று கூறியுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இறந்த தாயின் அருகில் உயிருடன் கண்டெடுக்கப்பட்ட 5 மாதக்குழந்தை – இஸ்ரேல் தாக்குதலின் பேரவலம்

மேலும் இதுகுறித்து தெரிவித்த மூன்று குழந்தைகளின் தாயான ரீம் ஜார்ஜோயூர்,”பெற்றோரின் மனநலம் பாதிக்கப்படுவதாக குழந்தைகள் உணர்ந்தால் பிள்ளைகளும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். எனவே, என் பிள்ளைகளின் முன்பு நாங்கள் துன்புறுவதாக காட்டிக்கொள்ளாமல் மறைத்துவிடுகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து தெரிவித்துள்ள உளவியல்சிகிச்சையாளர் காடா ரெட்வன், தாக்குதல் நடந்து கொண்டிருக்கும் போது எண்ணற்ற பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உளவியல் ரீதியாக உதவச்சொல்லி அழைத்ததாகவும், எண்ணற்ற குழந்தைகள் அதிர்ச்சி மற்றும் உச்சபட்ச பயத்தில் உள்ளதாகவும் அல்-ஜசீரா செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் நடத்திவரும் மனிதஉரிமை மீறல்களை விசாரிக்க வேண்டும் – சர்வதேச நீதிமன்றத்திற்கு பாலஸ்தீன வெளியுறவுத்துறை அமைச்சர் கடிதம்

பாலஸ்தீனத்தின் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 66 குழந்தைகள் இறந்துள்ளதாகவும், 1800 குடியிருப்பு வளாகங்கள் முழுமையாகவும் மற்றும் 14,300 கட்டிடங்கள் பகுதியளவிலும் தகர்க்கப்பட்டுள்ளதாகவும், 10,000 மேற்பட்டோர் அகதி முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்