Aran Sei

அமேசான் நிறுவனத்தில் உருவாகிறதா தொழிற்சங்கம்? – தொழிலாளர்களிடையே இன்று வாக்கெடுப்பு

மேசான் நிறுவனத்தில் இன்று, முதல் தொழிற்சங்கத்தை நிறுவுவது தொடர்பான வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது.

அமேரிக்காவில், மிகவும் ஏழ்மையான மற்றும் மிகவும் பின்தங்கிய மாநிலமான அலபாமா குறைந்த கூலிக்கு தொழிற்நிறுவனங்கள் நடத்துவதற்கு உகந்த இடமாகும். அங்கு 5800 க்கும் மேற்பட்ட தொழிலார்களை கொண்டு இயங்கும் அமேசான் நிறுவனத்தின் கிடங்கு (Warehouse) செயல்பட்டு வருகிறது. அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் சிலர், தங்களுடைய கோரிக்கைகளைத் தெரிவிக்கவும், உரிய பிரதிநிதித்துவம் கோரியும் நிர்வாகத்துக்கு எதிராக குரல் கொடுத்துள்ளனர்.

இந்தப் பிரச்சனை தற்போது ஒரு முடிவை எட்டியுள்ளது, இன்றைய தினம் அமேசான் நிறுவனத்தின் கிடங்கில் பணிபுரியும் தொழிலாளர்கள், தொழிற்சங்கம் நிறுவப்படுவது தொடர்பாக வாக்கெடுப்பில் வாக்கு செலுத்துகின்றனர்.

ஓட்டுனர்களின் உரிமைகள் – பிரிட்டனில் பணிந்த ஊபர், பிற ஐரோப்பிய நாடுகளிலும், இந்தியாவிலும் தாக்கம் என்ன?

அமேசான் நிறுவனம் மற்ற மாநிலங்களில் வழங்கும் சம்பளத்தை விட இரண்டு மடங்கு குறைந்த சம்பளத்தை அலபாமா தொழிலாளர்களுக்கு வழங்கியதாகவும், கொரோனா தொற்று சமயத்தில் கூட தொழிலாளர்களுக்குப் போதிய ஊதியத்தை வழங்காததே, தொழிற்சங்கம் உருவாக்கப்படுவதற்கான முதற்காரணம் எனக் கூறப்படுகிறது.

” தொழிற்சங்க உரிமையில் முதலாளிகள் தலையிட முடியாது ” – அமேசான் ஊழியர்களுக்கு ஆதரவாக ஜோ பைடன்

அமெரிக்காவின் மிகப் பெரிய அதிகாரத்தைப் கொண்டுள்ள அமேசான் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களே தொழிற்சங்கங்களுக்குப் பின்னால் அணி திரள்வது, அமெரிக்கா முழுவதும் பரவி விடுமா எனும் கண்ணோட்டத்தில், அலபாமாவில் நடக்கும் இந்த வாக்கெடுப்பு மிகவும் நுட்பமாக கவனிக்கப்படுகிறது.

சமூக மாற்றத்திற்கு வித்திட்ட அறிவொளி: மானமிகு தோழர் ம.சிங்காரவேலர் – விக்ரம் கௌதம்

தொழிற்சங்கம் உருவாக்குவது தொடர்பாக பேசிய, டேரில் ரிச்சர்ட்சன் எனும் ஊழியர், எப்போது வேண்டுமானாலும் பணியிலிருந்து நீக்கப்படலாம் எனும் அச்சத்திலேயே இருக்கிறேன் எனவும் தொழிலாளர்களுக்கு நிறுவனங்கள் மதிப்பளிதில்லை எனவும் கூறியுள்ளார். மேலும் “ ஒரு தொழிற்சங்கம் எதையெல்லாம் சாதிக்கும் என்பதை முழுதும் உணர்ந்திருக்கேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

தனியாருக்கும் வழங்கப்படும் மின்வாரியப் பணிகள் – ஊழியர்கள் போராட்டம் – ஸ்டாலின் கண்டனம்

இந்நிலையில் அமெரிக்காவின், சுயேட்சை செனட்டரான (நாடாளுமன்ற உறுப்பினர்), பெர்னி சேண்டர்ஸ், அமேசான் நிறுவனத்தின் தொழிலாளர்களுக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார்.

போராடும் விவசாயிகள் மத்தியில் ஒரு நாள் – வீடியோ

”இந்த மாநிலம் வரலாற்று ரீதியாக தொழிற்சங்கங்களுக்கு எதிரானது. அதனால் தான், இந்தத் தொழிலாளர்களின் போராட்ட குணத்தை கண்டு, நான் ஈர்க்கப்பட்டும், நெகிழ்ந்தும் இருக்கிறேன்” என்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

சித்திக் கப்பன் : ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர் சிறையிடப்பட்டு சித்திரவதை : பிபிசி கட்டுரை

”இது போன்றோரு முன்னெடுப்பு அலபாமா தவிர வேறு எங்கும் நடைபெற்று இருக்காது, இந்த மக்கள் வாக்குரிமைக்காக போராடி வீதிகளில் உயிரை விட்டவர்கள். உலகத்தின் வேறு எந்தப் பகுதியையும் விட அலபாமா தான் ஜெஃப் பெசாஸை (அமேசான் நிறுவனர்) கேள்வி கேட்கத் தகுதியான இடம். நாங்கள் மீண்டும் வரலாற்றை உருவாக்கப் போகிறோம்” என அலபாமா ஜனநாயக கட்சியின் தலைவர் கிறிஸ்டோபர் இங்கிலாண்ட் தெரிவித்துள்ளார்.

SOURCE : AFP

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்