Aran Sei

“குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக எல்லை பாதுகாப்பு படை செயல்படுகிறது” – தேர்தல் ஆணையத்தில் திரிணாமுல் புகார்

மேற்கு வங்காளத்தில், எல்லைப் பாதுகாப்பு படையினர், எல்லைப்பகுதியை சேர்ந்த மக்களை, அவர்கள் விரும்பும் குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு ஓட்டு போடுமாறு மிரட்டுவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர், தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர்.

பாஜகவை வீழ்த்த இடதுசாரிகளும், காங்கிரசும் மம்தா பின் அணிதிரள வேண்டும் – திரிணாமுல் காங்கிரஸ் அழைப்பு

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிக்காக, சுனில் அரோரா தலைமையிலான தேர்தல் ஆணையம், நேற்றைய ஜனவரி 20 ஆம் தேதி, மேற்கு வங்கம் சென்றனர். அவர்களிடம், திரிணாமுல் காங்கிரஸ் சார்பாக இந்த புகார் வழங்கப்பட்டுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸின் இந்தக் குற்றச்சாட்டுக்கு, பாதுகாப்பு படை இதுவரை விளக்கம் தரவில்லை. தங்கள் குற்றச்சாட்டு குறித்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவிக்கும்போது, “துணை ரானுவத்தினர் பலரும் எல்லைப்பகுதி மக்களை, அவர்கள் குறிப்பிடும் ஒரு கட்சிக்கு ஓட்டு போடும்படி நிர்ப்பந்த்திப்பதாக, எங்களுக்கு தகவல் கிடைத்தது. இது மிகவும் ஆபத்தான போக்கு என்பதால்,  இதுகுறித்து தேர்தல் ஆணையம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டிருக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.

“அவரைக் கட்சியில் இணைத்தது, துரதிர்ஷ்டவசமானது” – திரிணாமுல் காங்கிரஸ்

.இந்தக் குற்றச்சாட்டை போல, மதம் சார்ந்த பேச்சுகளால் மக்களிடையே பாஜக வன்முறையைத் தூண்டுவதாக திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பிர்ஹாத் ஹக்கீம் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

“கொரோனாவை விட பாரதிய ஜனதா கட்சி கொடியது” – சர்ச்சையை ஏற்படுத்திய திரிணாமுல் எம்பி

தேர்தல் ஆணைய அதிகாரிகள், மத்திய மற்றும் மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கு முன்பு, திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமன்றி, பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்