Aran Sei

‘பெகசிஸ் தொடர்பாக விசிக வழக்கு நடத்த முடிவு’ – திருமாவளவன் அறிவிப்பு

thirumavalavan

பெகசிஸ் விவகாரம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க அட்டார்னி ஜெனரல் அனுமதி மறுப்பு தெரிவித்துள்ளதால் நேரடியாக வழக்கு தொடுக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முடிவு செய்துள்ளதாக கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெகாசஸ் உளவு செயலி மூலம் ஒட்டுக்கேட்கும் விவகாரத்தில் நீதிக்குப் புறம்பாக செயல்பட்ட இந்திய உள்துறையின் இந்நாள், முன்னாள் செயலாளர்கள், பெகாசஸ் நிறுவனம் மற்றும் அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுப்பதற்கு அனுமதி கேட்டு இந்திய அட்டர்னி ஜெனரல் அவர்களுக்கு 13.08.2021 அன்று கடிதம் எழுதியிருந்தேன். அதற்கு பதிலளித்துள்ள அட்டர்னி ஜெனரல் அவர்கள், ‘இந்தப் பிரச்சினை நீதிமன்ற விசாரணையில் இருப்பதாலும், குற்றம் நடந்திருக்கிறதா என்பதைத் தீர்மானிக்க முடியாததாலும் இப்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுப்பதற்கு அனுமதி வழங்க இயலாது’ என்று தெரிவித்திருக்கிறார்.

நவராத்திரி திருவிழாவின் கடைசி நாளில் மோடி, அமித் ஷா கொடும்பாவி எரிக்கப்படும் – விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

அட்டர்னி ஜெனரல் அனுப்பியுள்ள கடிதத்தில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்:

“ பெகாசஸ் குழுமத்துக்கு எதிராகவும் அதன் இயக்குநர்கள், இந்திய உள்துறையின் தற்போதைய செயலாளர் திரு அஜய் பல்லா, முன்னாள் செயலாளர் திரு ராஜிவ் கௌபா ஆகியோருக்கு எதிராகவும் நீதிமன்ற அவமதிப்பு சட்டம்,1971 இன் பிரிவு 15 இன் கீழ் வழக்கு தொடுக்க அனுமதி கேட்டு தாங்கள் எழுதிய கடிதம் கிடைக்கப்பெற்றேன்.

13.08.2021 தேதியிட்ட உங்கள் கடிதத்தின் உள்ளடக்கங்களையும் அதனுடன் இணைக்கப்பட்ட ஆவணங்களையும் நான் கவனமாக ஆராய்ந்தேன். நீதிமன்ற அவமதிப்பு சட்டம் 1971 ன் கீழ் எனது ஒப்புதலுக்காக உங்கள் கடிதத்தில் சில குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளீர்கள்.

போதைப் பொருள் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டிய வழக்கில் பாஜகவினரை விடுவித்தது ஏன்? – மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் கேள்வி

இந்திய அரசு பெகாசஸ் மென்பொருளைப் பயன்படுத்தியிருக்கிறதா அவ்வாறெனில் யாருக்கு எதிராகப் பயன்படுத்தியது என்பது விவாதத்துக்குரியதாகவும், தற்போது உச்சநீதிமன்ற விசாரணையில் இருப்பதால் வெளிப்படையாக பேசப்பட முடியாததாகவும் ( sub-judice) உள்ளது. இந்திய உச்ச நீதிமன்றம் அந்த வழக்கில் தீர்ப்பளிக்காத நிலையில், நீதிமன்ற அவமதிப்பு சட்டம், 1971 ன் பிரிவு 15 ன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுப்பதற்கு நான் ஒப்புதல் அளிப்பது பொருத்தமற்றது. எனவே நீதிமன்ற அவமதிப்பு சட்டம்,1971 இன் பிரிவு 15 இன் கீழ் வழக்கு தொடுக்க நான் அனுமதி மறுக்கிறேன். “என்று அட்டர்னி ஜெனரல் தெரிவித்துள்ளார்.

‘ஆக்கிரமிப்பாளர்கள் மனிதர்களை வீழ்த்துகிறார்கள் ஆட்சியாளர்களோ விமானங்களையே வீழ்த்துகிறார்கள்’ – ஏர் இந்தியா விற்பனை குறித்து சு.வெங்கடேசன் விமர்சனம்

அட்டர்னி ஜெனரல் அனுமதி வழங்க மறுத்துவிட்டதால் மூத்த வழக்கறிஞர்களோடு கலந்தாலோசித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்