Aran Sei

போபால் குறித்து சர்ச்சையான கருத்து தெரிவித்த இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி – காங்கிரஸ் கண்டனம்

த்தியப் பிரதேச தலைநகர் போபால் குறித்து  தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தின் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அண்மையில், விவேக் அக்னிஹோத்ரி அளித்த நேர்காணல் ஒன்றில், போபாலி என்றால் ஓரினச்சேர்க்கையாளர் என பொருள் என்று அவர் கூறியது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அம்மாநில எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியினர் விவேக் அக்னிஹோத்ரியின் கருத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

“நான் போபாலில் வளர்ந்தவன், ஆனால் நான் போபாலி அல்ல. ஏனெனில் போபாலி என்ற சொல்லுக்கு வேறு அர்த்தம் உள்ளது. நான் அதை வேறொரு சமயத்தில் தனிப்பட்ட முறையில் உங்களுக்கு விளக்குகிறேன். ஒருவர் தன்னை போபாலி என்று சொன்னால், அவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் அல்லது நவாபி ஷாக் (நவாபி விருப்பம்) என்று அர்த்தம்” என்று அந்நேர்காணலில் விவேக் அக்னிஹோத்ரி கூறியுள்ளார்.

’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ குறித்து ட்வீட் செய்த ஐஏஎஸ் அதிகாரி –நோட்டீஸ் அனுப்பிய மத்திய பிரதேச அரசு

இந்நேர்காணலின் காணோளியை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அம்மாநில முன்னாள் முதலமைச்சர் திக்விஜய சிங், தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

வைரலான இக்காணொளி தொடர்பாக, விவேக் அக்னிஹோத்ரிக்கு போபாலில் உள்ள காங்கிரஸின் மாணவர் பிரிவான இந்திய தேசிய மாணவர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பேசியுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பூபேந்திர குப்தா, “தனது கருத்துக்கு அக்னிஹோத்ரி நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். 24 மணி நேரத்திற்குள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவில்லை என்றால், எங்களின் போபால் நகரை இழிவுபடுத்தியதற்காக அவர்மீது வழக்கு தொடருவோம்” என்று எச்சரித்துள்ளார்.

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை யூட்யூபில் வெளியிடுங்கள், வரிவிலக்கு எல்லாம் தரமுடியாது: அரவிந்த் கெஜ்ரிவால்

இச்சர்ச்சைகளுக்கு மத்தியில், விவேக் அக்னிஹோத்ரி போபாலுக்கு வந்து இரண்டு மரக்கன்றுகளை நட்டுள்ளார். அப்போது, பாஜகவைச் சேர்ந்த மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானும் உடன் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: New Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்