Aran Sei

60% பாடங்கள் பார்வை திறனற்றவர்களால் படிக்க இயலவில்லை – என்.சி.இ.ஆர்.டி பாடத்திட்டத்தை ஆய்வு செய்த விதி அமைப்பு தகவல்

ன்.சி.இ.ஆர்.டி மத்திய பாடத்திட்டத்தில் சுமார் 60 விழுக்காட்டிற்கு மேற்பட்ட பாடங்கள் பார்வை திறனற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களால் படிக்க இயலாத நிலை உள்ளதாக விதி அமைப்பின் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

விதி என்ற ஆய்வு மையம் மேற்கொண்ட (Vidhi Centre for Legal Policy) ஆய்வில் என்.சி.இ.ஆர்.டி பாடத்திட்டத்தில் சரிபாதி பாடங்கள் பார்வை திறனற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களால் பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளதாகவும் அந்த ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

கொரோனாவால் இந்தியாவில் 25 கோடி குழந்தைகளின் கல்வி பாதிப்பு – யுனிசெஃப் அறிக்கை

மேலும், மத்திய அரசின் மின்ணனு கல்வி தளமான தீக்சாவில் உள்ள பாடங்களைப் பார்வை திறனற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களால் பயன்படுத்த இயலவில்லை என்று ஆய்வு குறிப்பிட்டுள்ளது.

தமிழகம், தெலுங்கானா மற்றும் என்.சி.இ.ஆர்.டி அமைப்பு வெளியிட்டுள்ள மின்ணனு பாடங்களில் 65 விழுக்காடு பாடங்கள்பயன்படாத அளவில் உள்ளதாகவும், என்.சி.இ.ஆர்.டி வெளியிட்டுள்ள 907 கற்றல் செயல்பாடுகள் பார்வை திறனற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குப் பயன்படாத அளவில் உள்ளதாகவும், அதில் 80 விழுக்காடு கணித படமாகும் என்றும் விதி ஆய்வு மையத்தின் அறிக்கை கூறுகிறது.

கொரோனா காலத்தில் தேர்வுகள் குழந்தைகளின் மனநலத்தை பாதிக்கும் – பிரியங்கா காந்தி

இதுகுறித்து தெரிவித்துள்ள கொல்கத்தாவை சேர்ந்த பார்வைத்திறனற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் அனிர்பன் , “கொரோனா தொற்று காரணமாக இணையவழி வகுப்புகள் நடந்து வரும் சூழலில் பார்வைத்திறனற்ற மாணவர்களின் கல்வி முற்றிலுமாகத் தடம் புரண்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்