விஷ்வ ஹிந்து பரிஷத் உறுப்பினர்கள் சிலர் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்திய குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் வஸ்த்ராபூர் பகுதியில் உள்ள ஏரி தோட்டத்தில், சுத்தம் செய்யும் சடங்கு செய்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு, வஸ்த்ராபூர் ஏரியின் தோட்டத்தில் நான்கு இஸ்லாமிய ஆண்களும் இரண்டு பர்தா அணிந்த பெண்களும் தொழுகை நடத்துவதைக் காட்டும் காணொளி சமூக வலைதளங்களில் வெளிவந்தது. ஏரிக்கு அருகில் உள்ள பல மாடி கட்டிடத்தில் வசிப்பவர் இக்காணொளியை படமாக்கியிருக்கலாம் என்று காட்சிகள் தெரிவிக்கின்றன.
குஜராத் மாநில விஷ்வ ஹிந்து பரிஷ்த்தின்(விஎச்பி) செயலாளர் அசோக் ராவல், “நேற்று முன்தினம்(நவம்பர் 15) மாலை, சில விஷ்வ ஹிந்து பரிஷ்த் தொண்டர்கள் அந்த இடத்தை சுத்தம் செய்வதற்காக அந்த தோட்டத்தை அடைந்தனர். அங்கு மந்திரங்களை உச்சரித்து கங்கை நீரை தெளித்தனர். இது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக இருந்தது. இந்த ஒரு சாதாரண தொழுகையானது இறுதியில் அந்நிலத்திற்கே அவர்கள் உரிமைகோரும் நிலையில் போய் முடியும்” என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள வஸ்த்ராபூர் காவல் ஆய்வாளர் சந்தீப் காம்ப்லா, இதுவரை இது தொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றும் நேற்று(நவம்பர் 16) நடந்த சுத்திகரிப்பு சம்பவம் குறித்து யாரும் தங்களை அணுகவில்லை என்றும் கூறியுள்ளார்.
கிடைக்கப்பெற்ற தரவுகளின்படி, தொழுகை நடத்தும் நபர்கள் ஏரிக்கு அருகில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினரைப் பார்க்க வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.