பெண் காவல் கண்காணிப்பாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக டிஜிபி மீது புகார் எழுந்ததையடுத்து தமிழக அரசு விசாரணை குழுவை அறிவித்தது. பாலியல் புகாரை வசாரித்த விசாகா கமிட்டி அதன் விசாரணை அறிக்கையைத் தமிழக அரசிடம் வழங்கியுள்ளது.
முதலமைச்சரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இதனைப் புகார் தெரிவிக்க வந்த நிலையில், விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் தடுத்ததாகவும் பெண் காவல் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் புகார் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக இருவர் மீது தமிழக சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், பணியிடத்தில் பாலியல் தொல்லை தொடர்பாக தமிழக அரசின் திட்ட வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் விசாகா குழு அமைக்கப்பட்டது.
கடந்த மாதம் 26 ஆம் தேதி விசாரணையைத் தொடங்கிய விசாகா கமிட்டி, 14 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி முதற்கட்ட அறிக்கையைத் தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
Source : Puthiyathalaimurai
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.