Aran Sei

விருதுநகர்: பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பட்டியலின பெண்ணிடம் சிபிசிஐடி விசாரணை

விருதுநகர் மாவட்டத்தில் 2 திமுக நிர்வாகிகள், நான்கு பள்ளி மாணவர்கள் உட்பட 8 பேரால் பலமுறை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 22 வயது பெண்ணிடம் இன்று ( மார்ச் 25) சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர்.

விருதுநகர்: கூட்டுப்பாலியல் செய்யப்பட்ட பட்டியலின பெண் – குற்றஞ்சாட்டப்பட்ட 8 பேர் கைது

இந்த வழக்கில் கைதானவர்களைக் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வன்கொடுமை தடுப்புச் சட்ட நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் மனு தாக்கல் செய்யவுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில், மார்ச் 21 அன்று, விருதுநகரைச் சேர்ந்த ஹரிஹரன், ஜுனைத் அகமது, பிரவீன், மாடசாமி மற்றும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் படிக்கும் நான்கு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாதி ஆணவ கொலைகளை தடுக்க தனிச் சட்டம் வேண்டும் – தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோரிக்கை

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், எட்டு பேர் மீதும் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் உள்ள பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று (மார்ச் 24) மாலை, இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட 8 பேர் மீது சிபிசிஐடி காவல்துறையினர் 6 பிரிவுகளின் கீழ் புதிதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

TNPSC விண்ணப்பத்தில் சர்ச்சை – இஸ்லாமியர்களுக்கு மட்டும் மதம் மாறியவர்களா என்று கேள்வி

சைபர் கிரைம் காவல்துறையினரின் உதவியோடு பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட காணொளி மற்றும் புகைப்படங்களை யார் யாருக்கு எப்போது பகிர்ந்துள்ளார்கள் என்பது குறித்தும், இதில் தொடர்புள்ள நபர்கள் யார் யார் என்பது குறித்தும் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source : Hindu Tamil

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்