Aran Sei

ஆன்லைன் கருத்தரங்கிற்கு அரசிடம் அனுமதி பெற வேண்டும் – பல்கலைகழகங்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு வெளியுறவு அமைச்சகம் புதிய கட்டுப்பாடு

ர்வதேச மாநாடுகள், பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள் போன்றவற்றை மெய்நிகர் (Virtual) வாயிலாக நடத்துவதற்கு மத்திய அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்பதை இந்திய வெளியுறவு அமைச்சகம் கட்டாயமாக்கியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் உள்விவகாரங்களான நாட்டின் பாதுகாப்பு, வடகிழக்கு மாநிலங்கள், ஜம்மு & காஷ்மீர், லடாக் அல்லது வேறு ஏதேனும் பிரச்னைகள் தொடர்பான தலைப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்பிற்கான யுத்தம், போர்க்குணத்துடன் அழகாக வெல்லப்பட வேண்டும் – அருந்ததி ராய்

2020 ஆம் ஆண்டு நவம்பர மாதம் இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட மெய்நிகர் நிகழ்வுகளுக்கான புதிய வழிகாட்டுதல்களின் ஒரு பகுதியாக இந்த ’ஒப்புதல் நடைமுறை’ அறிவிக்கப்பட்டு இருப்பதாகவும், மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், பொதுநிதி அளிக்கப்பட்ட பல்கலைகழகங்கள், யூனியன் மற்றும் மாநில அரசுகளால் நடத்தப்படும் நிறுவங்களுக்கு இந்த விதி பொருந்தும் என அதில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

மெய்நிகர் நிகழ்வின் அமைப்பாளர்கள், நிகழ்வின் கருப்பொருள் மற்றும் பங்கேற்பாளர்களின் பட்டியல் தொடர்பாகத் துறையின் ”நிர்வாகச் செயலாளரை” அணுக வேண்டும் என வெளியுறவு துறையின் அறிக்கையில் இருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

நவம்பர் 25, 2020 தேதியிட்டு வெளியிட்ட உத்தரவில், நிகழ்வுகளுக்கு அனுமதியளிக்கும் அமைச்சகங்கள், நிகழ்வின் தலைப்பு நாட்டின் உள்நாட்டு பிரச்னைகள் தொடர்பானதாக இருக்க கூடாது எனக் குறிப்பிட்டு இருக்கும் வெளியுறவுத்துறை அமைச்சகம், எது எல்லாம் உள்நாட்டு பிரச்னைகள் என்ற விரிவான ஒரு வரையறையை வகுக்கவில்லையென இந்தியன் எக்ஸ்பிரஸ்  குறிப்பிட்டப்பட்டுள்ளது.

’எல்ஐசி உள்ளிட்ட அரசு நிதி நிறுவனங்களின் பங்குகளை ரூ.1.75 லட்சம் கோடிக்கு விற்க இலக்கு’ – நிர்மலா சீதாராமன்

“புதிய ஒப்புதல் செயல்முறை கல்வி சமூகத்தைக் கவலையடைச் செய்கிறது. அனுமதிக்காக அரசுக்குக் கடிதங்கள் எழுதுவதில் சிக்கல் இல்லை. ஆஃப்லைன் மாநாடுகளுக்கு வெளிநாட்டு பேச்சாளர்களுக்கு விசாக்களை எளிதாக்க நாங்கள் எப்படியும் வெளியுறவுத்துறைக்கு  எழுதுகிறோம். பிரச்சனை என்னவென்றால், அரசாங்கத்தின் பதில்கள் எப்போதும் தாமதமாகின்றன அல்லது சரியான நேரத்தில் வருவதில்லை. இப்போது எல்லா ஆன்லைன் மாநாடுகளுக்கும் நாங்கள் அவர்களை அணுக வேண்டும் எனக் கூறுவது, அதிக தாமதங்களை மட்டுமே ஏற்படுத்தும். இனி  ஆன்லைன் மாநாடுகளை ஏற்பாடு செய்வது கடினமாகிவிடும் ”என  அடையாளம் காண விரும்பாத ஐ.ஐ.டி இயக்குனர் ஒருவர் கூறினாரென இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் பட்ஜட்: இந்திய மக்களுக்கு சொல்லும் சேதி என்ன?

அரசாங்க ஆதாரங்களின்படி கடந்த ஆண்டு, கொரோனா ஊடரங்கு காலத்தில், மெய்நிகர் கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகளுக்குப் பலரும் தள்ளப்பட்டதால், புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டதாகவும், மேலும் இது போன்ற ஆன்லைன் நிகழ்வுகளுக்கு அரசாங்கத்தின் எந்த மேற்பார்வையும் இல்லையென அந்தச் செய்தியில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

பாதுகாப்பு, உள்நாட்டு விஷயங்கள், வெளிநாட்டு நிதி, ஸ்பான்ஷர்ஷிப் ஆகியவற்றிடன் தொடர்பிருப்பதால், சர்வதேச மாநாட்டு அமைப்பாளர்கள், வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் அனுமதி பெறும் வழக்கம் நடைமுறையில் இருப்பது தானென இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்