மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தலுக்குப் பின் நடந்த கலவரம் தொடர்பாக மத்தியப் புலனாய்வுத் துறை இரண்டு குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 25 அன்று மத்தியப் புலனாய்வுத் துறை இதுகுறித்து வழக்குப் பதிவு செய்தது.
இந்நிலையில், நேற்றைய தினம் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், கடந்த ஜூன் 6 அன்று துண்டுன் சவுத்ரி, சந்தன் சிங், லாலன் சிங் மற்றும் அனிமேஷ் பால் ஆகிய நால்வர் வீட்டின் மீது வெடிகுண்டு வீசியதாகவும் இதன் காரணமாக ஒருவர் கொல்லப்பட்டார் என்று கூறப்பட்டுள்ளது.
கலவரம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு குற்றப்பத்திரிக்கையில், பிர்பும் மாவட்டத்தின் நல்ஹிடி பகுதியின் வயலில் கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்டது.
இதுகுறித்த வழக்கானது ஆகஸ்ட் 28 அன்று பதியப்பட்டது.
மத்தியப் புலனாய்வுத் துறை மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தலுக்குப் பின் நடந்த கலவரம் தொடர்பாக 34 வழக்குகளை விசாரித்து வருகிறது.
source: தி வயர்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.