Aran Sei

‘சட்ட ஒழுங்கை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுங்கள்’ – பதவியேற்பு விழாவில் மம்தாவிடம் ஆளுநர் வேண்டுகோள்

மேற்குவங்கத்தில் சட்ட ஒழுங்கைக் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆளுநர் ஜெகதீப் தங்கர் மாநில முதலமைச்சராக மம்தா பானர்ஜி பதிவியேற்கும் விழாவின்போது தெரிவித்துள்ளதாக ஒன் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

மேற்குவங்கத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பின் நடக்கும் வன்முறைகுறித்து தெரிவித்த ஆளுநர், “மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னான வன்முறைகளைக் கட்டுப்படுத்தி சட்டத்தின் வழியிலான ஆட்சியை மேற்கொள்ள முதலமைச்சர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சர், என் தங்கை, இந்தச் சம்பவத்தைக் கட்டுப்படுத்துவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் வேலை இழந்தவர்களின் பொருளாதார உதவிக்கான கோரிக்கையை பரிசீலனை செய்யுங்கள் – மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்த நிலையில் அங்கு எண்ணற்ற பகுதிகளில் கலவரம் வெடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், மேற்கு வங்க மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வந்தபோது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரால் பாஜகவினர் தாக்கப்பட்டதாகவும் அதனால் 5 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அம்மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் தெரிவித்திருந்தார்.

‘மக்களுக்கு படுக்கை வசதி இல்லை; நீதிபதிகளுக்கு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் படுக்கையா?’ – டெல்லி அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

இதுகுறித்து, நேற்றைய தினம் அம்மாநில ஆளுநர் விசாரணைக்கும் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், மேற்குவங்க முதலமைச்சராக மம்தா பானர்ஜி மூன்றாவது முறையாகப் பதவியேற்றபோது தலைமைதாங்கிய ஆளுநர் ஜெகதீப் தங்கர் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற  மம்தா பானர்ஜி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த விழா முடிந்த சிலநொடிகளிலே  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

SOURCE; NDTV

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்