Aran Sei

உத்தரபிரதேச வன்முறை – ஒன்றிய உள்துறை இணையமைச்சர் மகன் மீது கொலை வழக்கு பதிவு

த்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாய சட்டங்களை நீக்கக்கோரி விவசாயிகள் போராட்டத்தில் நடந்த வன்முறையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.  இச்சம்பவம் தொடர்பாக ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உள்பட 14 பேர் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஸ் மிஸ்ரா மகன் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒன்றிய உள்துறை இணை அமைச்சருக்கு சொந்தமான கார் உள்ளிட்ட 3 கார்கள் மோதல் – 4 விவசாயிகள் உயிரிழப்பு

இதற்கிடையில் நடந்த சம்பவத்துக்கும் தனது மகனுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என அமைச்சர் அஜய் மிஸ்ரா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “சம்பவ இடத்தில் எனது மகன் இல்லவே இல்லை. அங்கிருந்த சில சமூக விரோதிகளும் போராட்டக்காரர்களும்தான் கத்தி, கம்பு கொண்டு தாக்கியுள்ளனர். என் மகன் மட்டும் அங்கிருந்திருந்தால் நிச்சயமாக உயிருடன் திரும்பியிருக்க மாட்டார். எனது மகன் துணை முதல்வர் நிகழ்ச்சியில் இருந்தார். நானும் அந்த நிகழ்ச்சியில் தான் இருந்தேன்” என்று கூறியுள்ளார்.

லக்கிம்பூர் வன்முறை குறித்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “இது போன்ற சம்பவங்கள் துரதிர்ஷ்டவசமானவை. இது குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சமூக விரோதிகளின் ஈடுபாடு கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

‘லக்கிம்பூர் கெரி வன்முறை’ – ஒன்றிய உள்துறை இணை அமைச்சரை கைது செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லக்கிம்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. லக்கிம்பூருக்குச் செல்லும் அனைத்து பாதைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

லக்கிம்பூர் சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப் பட வேண்டும் என்று உ.பி. முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி கோரிக்கை விடுத்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்