மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் வன்முறையை ஏற்றுக்கொள்ள முடியாது என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் ஜித்தின் பிரசாதா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டர் பதிவிட்டுள்ள அவர், “தேர்தலிக்கு பின் காங்கிரஸ் கட்சியினர் மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் நடத்தி வரும் தாக்குதல் ஏற்க முடியாது. குழந்தைகள், பெண்களைக் கூட விட்டு வைக்கவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.
The post poll violence that has been unleashed by the TMC on the Congress workers is unacceptable. Even women and children are not spared. I’m sure the people of West Bengal did not vote for this lawlessness.
@INCWestBengal @INCIndia https://t.co/uNZ6H1mLZP— Jitin Prasada जितिन प्रसाद (@JitinPrasada) May 4, 2021
மேலும், மற்றொரு ட்விட்டர் பதிவில், “ஒரு அரசியல்வாதி அல்லது அரசாங்க ஊழியரின் கடமை, அனைத்து தவறுகளுக்கும் எதிராக பேசுவதும், ஒருவர் எந்தச் சித்தாந்தத்தை சேர்ந்தவர் என்பதை பொருட்படுத்தாமல் தங்கள் ஊழியர்களுடன் நிற்பபதும் தான்” என பதிவிட்டுள்ளார்.
The duty of every politician/ public servant is to speak up against all wrongs and stand by their cadre irrespective of which ideology one belongs to… https://t.co/w8sPTF4klA
— Jitin Prasada जितिन प्रसाद (@JitinPrasada) May 4, 2021
மம்தா பானர்ஜியின் வெற்றிய பாராட்டிப் பதிவிட்டிருந்த மக்களவை உறுப்பினர் சசி தரூர், “மேற்கு வங்க தேர்தலில் தோற்ற கட்சிகளின் உறுப்பினர்கள் அல்லது ஆதரவாளர்கள்மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சினர் தாக்குதல் நடத்துவதாக வரும் செய்தி கவலையளிக்கிறது. திரிணாமுல் கட்சியினரின் இந்தச் செயலை மம்தா மன்னிக்கக் கூடாது மற்றும் இதனை நிறுத்துவதற்கு உடனடியாக விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் நம்பிக்கை சிதைக்கப்பட கூடாது” என பதிவிட்டுள்ளார்.
The reports of violence by @AITCofficial workers against members& supporters of losing parties in Bengal are disturbing. I am sure this cannot be condoned by @MamataOfficial & count on her to take prompt& decisive action to stop this. The people's mandate shouldn't be undermined!
— Shashi Tharoor (@ShashiTharoor) May 4, 2021
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய, காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சக்திசிங் கோஹில், ”காங்கிரஸ் கட்சி எந்த வகையான வன்முறையையும் ஆதரிக்கவில்லை. அது எந்த வகையான வன்முறையையும் ஒரு போதும் மன்னிக்கவோ அல்லது ஆதரிக்கவோ இல்லை. ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ”மம்தா பானர்ஜி, மேற்கு வங்கத்தில் இவ்வளவு அன்பையும் வாக்குகளையும் பெற்றிருந்தால், அவர் வன்முறையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இறந்தவர்கள் பாஜக கட்சியினராக இருந்தாலும், அவர்களுக்கு எங்கள் அனுதாபங்கள்” என்று திரு. கோஹில் தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.