Aran Sei

பாஜக வேட்பாளரின் வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் – எதிர்கட்சிகள் முற்றுகையிட்டதால் வன்முறை

சாமில் வாக்குப்பதிவு இயந்திரங்களை பாஜக வேட்பாளரின் வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டதற்கு எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வாகனத்தை முற்றுகையிட்டதால், வன்முறை வெடித்தது என என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

அசாம் சட்டப்பேரவைக்கான இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் 77 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளன.

கரீம்கஞ்ச் மாவட்டம், ரத்தானரி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் முடிந்து வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாக்கும் இடங்களுக்கு எடுத்துச் செல்லும் போது பாஜக வேட்பாளருக்குச் சொந்தமான வாகனம் பயன்படுத்தப்பட்டதற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததாக, என்டிடிவி தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சியில் அறிஞர் அண்ணாவின் சிலைக்கு தீ வைப்பு – காவல்துறை விசாரணை

வாகனத்தை எதிர்கட்சியினர் முற்றுகையிட்டதை அடுத்து, அவர்களை அப்புறப்படுத்தக் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு, தடியடி பயன்படுத்தியதால், அந்தப் பகுதியில் வன்முறை வெடித்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

நெருங்கும் தேர்தல் – ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரி சோதனை

”தேர்தல் ஆணையத்தின் வாகனம் பழுதடைந்ததை அடுத்து, தனியார் வாகனம் பயன்படுத்தப்பட்டது என்றும், வாக்குப்பதிவு இயந்திரம் பத்திரமாக இருக்கிறது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாக என்டிடிவி தெரிவித்துள்ளது.

மேலும், அந்தத் தனியார் வாகனம் வேட்பாளருக்குச் சொந்தமானது என்பது தெரியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கும் நிலையில், அந்த வேட்பாளரின் வேட்புமனுவில் அளிக்கப்பட்ட பிரமாண பத்திரத்தில்  அவருக்குச் சொந்தமான வாகனம் குறித்து தகவலில் வாக்குப்பதிவு இயந்திரம் ஏற்றிச்செல்ல பயன்படுத்தப்பட்ட வாகனத்தின் தகவல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்