Aran Sei

சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைக் களமாக மாறியுள்ளது இந்தியா – ஆய்வு முடிவு

credits : the indian express

மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில், இந்தியா, இஸ்லாமிய சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை களமாகவும், ஆபத்தான இடமாகவும் மாறியுள்ளது என தெற்கு ஆசிய நாடுகளின் சிறுபான்மையினர் தொடர்பாக வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு முதல், தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் சிறுபான்மையினரின் நிலை குறித்து ஆண்டுதோறும் இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், பாஜக ஆட்சியில் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் மற்றும் தலித்துகளுக்கு எதிரான கும்பல் கொலைகள் அதிகரித்து விட்டதாகவும், சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடான சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது, அதைத் தொடர்ந்து மாநிலத்தின் தகவல்தொடர்பு தூண்டிக்கப்பட்டது, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு காஷ்மீரின் அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டது போன்றவை ஜனநாயக விரோத நடவடிக்கைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நரேந்திர மோடி அரசு அரசியல்சாசன தினத்தை கொண்டாடுவது நகை முரண் – எஸ்.என்.சாஹூ

2019-ம் ஆண்டு இந்திய அரசால் அமல்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தின்படி டிசம்பர் மாதம் 2014-ம் ஆண்டுக்கு முன்னர், இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், வங்காள தேசம் ஆகிய நாடுகளில் இருந்து வெளியேறி இந்தியாவில் குடியேறியுள்ள இந்துக்கள், சீக்கியர்கள், பெளத்தர்கள், சமணர்கள் (Jains), பார்சிக்கள், கிறிஸ்துவர்கள் ஆகியோருக்கு குடியுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்தப் பட்டியலில் இஸ்லாமியர்கள் சேர்க்கப்படவில்லை.

இதையடுத்து, சட்டவிரோதமாக குடியேறியுள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்களை வெளியேற்ற தேசிய குடியுரிமை பதிவேட்டின் கணக்கெடுப்பையும் தொடங்க இருப்பதாக இந்திய அரசாங்கம் அறிவித்தது ”இஸ்லாமியர்களை நாடற்றவர்களாக மாற்றுவதற்கான திட்டம்” என அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

வெறுப்பு அரசியலின் அடியாள் – யார் இந்த ‘தீபக் சர்மா’? – அலிஷான் ஜஃப்ரி

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு டெல்லியில் நடந்த போராட்டம் வகுப்புவாத கலவரமாக வெடித்ததும், தப்லிகி ஜமாத் கூட்டத்தில் கலந்துக்கொள்ள டெல்லி நிசாமுதின் பள்ளிவாசலுக்கு வந்த இஸ்லாமியர்கள், இந்தியா முழுவதும் கொரோனா தொற்றைப் பரப்பியதாக இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பரப்பபட்டதும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சமீப காலமாக உத்தர பிரதேசத்தில் நடந்து கொண்டிருக்கும் சட்டவிரோத மதமாற்ற தடுப்புச் சட்டத்திற்கு எதிரான கைது நடவடிக்கைகளும், இஸ்லாமிய இளைஞர்களை குறிவைத்தே செய்யப்படுகிறது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பசுவை பாதுகாப்பதற்கு ஏறக்குறைய 60 சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அரசியல்வாதிகள்தான் மதத்தை முன்னிலைப்படுத்துகிறார்கள்” – அனுமன் கோயிலுக்கு இடம் வழங்கிய இஸ்லாமியர்

இந்திய அரசின் பெரும்பாண்மைவாதத்திற்கு எதிராக குரக் கொடுக்கும் மனித உரிமை ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள். பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள், போராடுபவர்கள் என அனைவரும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாரபட்சமான சட்ட நடைமுறைகள் தொடர்பாக குரல் எழுப்பும் மனித உரிமை ஆர்வலர்கள் பல விதமான எதிர்ப்புகளையும், கட்டுப்பாடுகளையும், வன்முறைகளையும், அவதூறுகளையும் சந்திப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் நடைபெறும் கைதுகள் அதிகரித்து வருவதும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வட கிழக்கு டெல்லியில் நடந்த கலவரத்தில் தொடர்புள்ளதாக காவல்துறையையும் ஆர்எஸ்எஸ் அமைப்பையும் விமர்சித்து செய்தி வெளியிட்ட இரண்டு கேரள செய்தி நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட தடையும் ஊடகத் துறையில் அதிகரித்து வரும் தணிக்கைகளும் அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்களாக இருக்கும் வரை, பிரெஞ்சுக்காரர்களாக இருக்க முடிவதில்லை

முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாக தெற்கு ஆசிய நாடுகளின் சிறுபான்மையினர் தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், உலகளாவிய பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் இந்தியா கடந்த ஆண்டை விட இரண்டு இடங்கள் குறைந்து 180 நாடுகளில் 142 வது இடத்தைப் பிடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்