Aran Sei

‘பெண் தேர்வர்களின் சட்டையை வெட்டிய அதிகாரிகள்’ – மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய தேசிய மகளிர் ஆணையம்

ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்வு எழுத வந்த பெண்களின் முழுக்கை சட்டைகள் வெட்டி எடுக்கப்பட்டு கண்ணியக் குறைவாக நடத்தப்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மாநில அரசுக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மாநில அரசு ஊழியர்கள் தேர்வுகளுக்கான முதற் கட்ட எழுத்துத் தேர்வு புதன்கிழமை நடைபெற்றது. அப்போது தேர்வு எழுத வந்த பெண் தேர்வர்கள் கண்ணியமற்ற முறையில் நடத்தப்பட்டதாக புகார்கள் எழுந்தன.

பிகானிர் பகுதியில் தேர்வு எழுத வந்த பெண் அணிந்த முழுக்கை சட்டையை ஆண் அதிகாரி வெட்டிய செய்தி ஊடகங்களில் வெளியானது. மேலும், முழுக்கை சட்டை அணிந்திருந்த ஆண் தேர்வர்கள்  சட்டையைக் கழட்டிய பிறகு தேர்வு எழுத அணுமதிக்கப்பட்டுள்ளனர்.

குடிசை மக்களுக்கான தமிழ்நாடு அரசின் கொள்கை வரைவு – நகரத்திலிருந்து வெளியேற்றப்படுவது தொடருமா என சமூகச் செயற்பாட்டாளர்கள் கேள்வி

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி ராஜஸ்தான் தலைமை செயலாளர் நிரஞ்சன் குமார் ஆர்யாவுக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

அதில், “புதின்கிழமை நடைபெற்ற அரசு ஊழியர்களுக்கான தேர்வின்போது, பெண் தேர்வர்கள் நடத்தப்பட்ட விதம் அறிந்து தேசிய மகளிர் ஆணையம் அதிர்ச்சியடந்துள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

”பெண்களுக்கு நேர்ந்த இந்த அவமானகரமான, வெட்ககேடான சம்பவத்தைத் தேசிய மகளிர் ஆணையம் வன்மையாக கண்டிப்பதோடு, தானாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றுக் கொள்கிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

‘‘2ஜி வழக்கில் மானநஷ்ட வழக்குப் பதிந்த காங்கிரஸ் முன்னாள் எம்பி – மன்னிப்பு கோரிய முன்னாள் சிஏஜி அதிகாரி

”பெண்கள் கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமையை மீறிய குற்றவாளிகள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் பெண் தேர்வர்கள் சோதனை செய்ய பெண் அதிகாரிகளை ஏன் நியமிக்கவில்லை என்பது தொடர்பான விளக்கத்தைத் தேசிய மகளிர் ஆணையத்திடம் வழங்க வேண்டும்” என தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா தெரிவித்துள்ளார்.

Source : The Hindu Tamil

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்