Aran Sei

பள்ளிகளில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் – தமிழ்நாடு அரசுக்கு ரவிக்குமார் எம்.பி வேண்டுகோள்

மாதிரிப் பள்ளிகளில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமெனக்கோரி தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.

கோவாக்சின் தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகள் – அவசர பயன்பட்டிற்கு அனுமதியளிக்கப்பட்டு ஆறு மாதங்களுக்கு பிறகு முடிவு வெளியீடு

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், ” தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையால் உருவாக்கப்பட்டுள்ள மாதிரிப் பள்ளிகளில் 2012 – 13 மற்றும் 2017- 18ஆம் கல்வி ஆண்டுகளில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் அலுவலகப் பணியாளர்களாக இளநிலை உதவியாளர், நூலகர், ஆய்வக உதவியாளர், அலுவலக உதவியாளர், துப்புரவுப் பணியாளர் இரவு காவலர், தோட்டக்காரர் என ஒவ்வொரு நிலையிலும் தலா 44 பேர் வீதம் 308 பேர் தற்காலிக ஊழியர்களாக நியமிக்கப்பட்டனர” என்று குறிப்பிட்டுள்ளார் .

மேலும், அவர்களுக்கு 4,500 ரூபாய் முதல் 6000 ரூபாய் வரை தொகுப்பூதியம் மட்டுமே வழங்கப்பட்டு வருவதாகவும், எனவே, அவர்களது பணியை நிரந்தரம் செய்ய வேண்டுமென ரவிக்குமார் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.

அரண்செய் சிறப்பிதழ் – ஏழு தமிழர் விடுதலை

அதுமட்டுமல்லாது, மாதிரிப் பள்ளிகளில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்து, ஏனைய ஊழியர்களைப் போல காலநிலை ஊதியம் வழங்கிட வேண்டும் என்றும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்