Aran Sei

பட்டியல் சமூகத்தினரை காலில் விழ வைத்த கொடூரம் – வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 8 பேர் மீது வழக்கு

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒட்டனந்தல் கிராமத்தில், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மூன்று முதியவர்களை ஆதிக்க சாதியினர் காலில் விழுந்து கும்பிட கட்டாயப்படுத்தி விழ வைத்துள்ளனர்.

மே 12 அன்று, ஒட்டனந்தல் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மக்கள் வசிக்கக்கூடிய காலனிப்பகுதியில் கலை நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது.

‘அரக்கோணம் சாதியப் படுகொலை’ – நீதி விசாரணை கோரும் புதிய தமிழகம் கட்சி

கொரோனா ஊரடங்கு காலத்தில் விதியை மீறி கலை நிகழ்ச்சி நடத்தியதால், அந்த நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்ட ஒலிபெருக்கி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அதனால்,  காவல் நிலையம் சென்று மின்னணு சாதனங்களை காலனிப்பகுதி மக்கள் திரும்பப் பெற்றுள்ளார்.

சோகனூரில் தலித்துகள் இரட்டைப் படுகொலை – நடந்தது என்ன?

இந்நிலையில், அந்த கலை நிகழ்ச்சி குறித்து காவல்நிலையத்துக்கு தகவல் அளித்த நபர், எங்களைப் பகைத்துக்கொண்டால் அனைவரையும் வெட்டுவேன் என்று காலனிப்பகுதி மக்களுக்குக் கொலைமிரட்டல் விடுத்துள்ளார்.

இதன் காரணமாக, அச்சமடைந்த காலனிப்பகுதியில் வசிக்கும் மக்களான ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் ஆதிக்க சாதியினரிடம்,  “தாயாய் பிள்ளையாய் பழகுகிறோம். நாம் இணக்கமாக செல்லலாம்.” என்று கூற, அதை ஏற்க மறுத்த அவர்கள், காலில் விழுந்தால் தான் உங்களை மன்னிப்போம் என்று உறுதியாக கூறியுள்ளார்.

கோபட் காந்தி அப்சல் குருவுடன் சிறையில் தேநீர் அருந்தியது ஏன் கவனத்தைப் பெறுகிறது? – பிரியா ரமணி

அதனால், காலனிப்பகுதியை சார்ந்த பெரியவர்கள் மூவர் ஆதிக்க சாதியினரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளனர். மேலும், ஆதிக்க சதியைச் சேர்ந்தவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களைச் சாதிப்பெயர் சொல்லி தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் 8 பேர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அப்புகாரின் பேரில், வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட 4 பிரிவில் 8 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்