Aran Sei

சாலையை சீர் செய்யாத உத்தரபிரதேச அரசு – தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் மிரட்டல்

த்திரபிரதேசத்தின் எட்டா சதார் தொகுதியில் உள்ள மோசமான சாலைகளால் கோபமடைந்த பொதுமக்கள் அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உத்திரபிரதேசத்தில் உள்ள குல்லா ஹபீப்பூர் கிராம மக்கள் நேற்று (ஜனவரி 21) மோசமான சாலைகளைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘சாலை போடவில்லையெனில் நாங்கள் ஓட்டுப் போடமாட்டோம்’ போன்ற முழக்கங்களை அப்போராட்டத்தில் அவர்கள் எழுப்பினர்.

மழை பெய்யும்போது, ​​சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், அன்றாட பணிகளை மேற்கொள்ள முடிவதில்லை என உள்ளூர் மக்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர். மேலும், மழைபெய்து உருவான பெரிய பள்ளங்களால், அடிக்கடி பலர் விபத்துக்குள்ளாவதைக் குறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

எங்கள் சாலைகளைச் சரிசெய்யும் வேட்பாளருக்கு நாங்கள் வாக்களிப்போம், இல்லையெனில் இந்த தேர்தலை நாங்கள் புறக்கணிப்போம் என்று உள்ளூர்காரரரான குமார் தெரிவித்தார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்