வியட்நாமில், காற்றில் வேகமாக பரவும் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட மாறுபாடுகளின் கலவையாக இது உள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றது.
தொழில்துறை மண்டலங்கள் மற்றும் பெரிய நகரங்களான ஹனோய், ஹோ சி மின் உள்ளிட்ட வியட்நாமின் நிலப்பரப்பில் பாதிக்கும் அதிகமான பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் பரவலை சமாளிக்க அந்நாட்டு அரசு போராடி வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘மக்களுக்கு நன்மை கிடைக்க அகங்காரம் கொண்ட பிரதமர் காலில் விழத்தயார்’ – மம்தா பானர்ஜி
வியட்நாமில் இதுவரை 47 பேர் உயிரிழப்புகள் உள்ளிட்ட 6,700 தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன என்றும், இவை அனைத்தும் ஏப்ரல் மாதத்தில் நிகழ்ந்துள்ளன என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
”நாங்கள் இந்தியா மற்றும் இங்கிலாந்து கண்டுபிடிக்கப்பட்டதுபோல்உருமாறிய மாறுபட்ட வைரஸ் மாதிரி ஒன்றை கண்டறிந்துள்ளோம் என அந்நாட்டு சுகாதார அமைச்சர் நுகுயென் தான் லாங், சனிக்கிழமை (மே 29) நடைபெற்ற தேசிய கூட்டத்தில் கூறியதாக அந்நாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
”புதிய கொரோனா வைரஸ் காற்றில் வேகமாக பரவுகிறது, தொண்டை திரவத்தில் வைரஸின் செறிவு வேகமாக அதிகரித்து, சுற்றியுள்ள சூழலுக்கு மிகவும் அதிகமாக பரவுகிறது என லாங் கூறியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறிப்பிடவில்லை, ஆனால் விரைவில் உருமாறிய கொரோனா குறித்த உலக வரைபடத்தில் வியட்நாம் இதைப் பதிவு செய்யும் என அவர் தெரிவித்துள்ளார்.
லாங் அறிவிப்பிற்கு முன்னர் வியட்நாமில் ஏழு அறியப்பட்ட கொரோனா வைரஸ் வகைகள் இருந்தன என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் கூறுகிறது.
Source : Guardian
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.