நவம்பர் 2-ம் தேதி (நேற்று) இரவு ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் பயங்கரவாதிகளால் ஆறு வெவ்வேறு இடங்களில் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டுள்ளது . இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் மூன்றுபேர் பயங்கரவாதி ஒருவர் உட்பட நான்குபேர் உயிரிழந்துள்ளனர் , பதினைந்துபேர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் உள்ளனர் .
காயம்பட்ட பதினைந்துபேரில் ஒருவர் காவல் துறையைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலின் போது காயமடைந்த ஒரு பெண் இன்று அதிகாலையில் இறந்துவிட்டதாக வியன்னாவின் மேயர் மைக்கேல் லுட்விக் தெரிவித்து உள்ளார்.
பயங்கரவாதி என சந்தேகப்படும் நபர் ஒருவர் போலீஸ் படையினரால் ரூபர்ட் தேவாலயம் அருகே கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து துப்பாக்கி மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாகத் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில் வியன்னாவின் உள்துறை அமைச்சர் காரல் நெகிமார், “இது ஒன்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார் மேலும் அவர், “இது யூத எதிர்ப்பின் காரணமாக நிகழ்ந்திருக்கலாம்” என்றும், “இதற்கு முன்னரும் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட தாக்குதலை எதிர்கொண்ட அனுபவம் உண்டு” எனவும் தெரிவித்துள்ளார் என்று தி கார்டியன் இணையதளம் தெரிவிக்கிறது.
ஆஸ்திரிய பிரதமர் செபாஸ்டியன் கிறிஸ் ” எங்கள் குடியரசில் நாங்கள் கடினமான நேரங்களை அனுபவித்து வருகிறோம் ” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் .
Wir erleben gerade schwere Stunden in unserer Republik. Ich möchte allen Einsatzkräften danken, die insbesondere heute für unsere Sicherheit ihr Leben riskieren. Unsere Polizei wird entschlossen gegen die Täter dieses widerwärtigen Terroranschlags vorgehen.
— Sebastian Kurz (@sebastiankurz) November 2, 2020
இந்தத் தாக்குதலுக்கு உலகநாடுகளின் தலைவர்களிடமிருந்து கண்டனங்கள் வந்த வண்ணம் உள்ளது .
இந்தியப் பிரதமர் மோடி இந்தப் பயங்கரவாத தாக்குதலால் அதிர்ச்சி அடைந்ததாகவும் இந்த இக்கட்டான சூழலில் ஆஸ்திரியாவோடு துணைநிற்பதாகவும் தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலியையும் அவர்தம் குடும்பங்களுக்கு ஆறுதலையும் தெரிவிப்பதாகத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Deeply shocked and saddened by the dastardly terror attacks in Vienna. India stands with Austria during this tragic time. My thoughts are with the victims and their families.
— Narendra Modi (@narendramodi) November 3, 2020
”வியன்னா மக்களுக்கு எங்களின் பிராத்தனைகள். இஸ்லாமிய பயங்கரவாதிகள் உள்ளிட்ட பயங்கரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் ஆஸ்திரியா, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு அமெரிக்கா துணைநிற்கும்” என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
Our prayers are with the people of Vienna after yet another vile act of terrorism in Europe. These evil attacks against innocent people must stop. The U.S. stands with Austria, France, and all of Europe in the fight against terrorists, including radical Islamic terrorists.
— Donald J. Trump (@realDonaldTrump) November 3, 2020
இத்தாலியப் பிரதமர் கியூசெப் கோன்டே மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் ஆகியோரும் இந்தத் தாக்குதல்களுக்குக் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் பிரான்சில் நடந்த தாக்குதல்கள் தொடர்பாக, ஒரு பயங்கரவாதத் தாக்குதல் நடந்தவுடனேயே எந்த ஆதாரமும் இல்லாமல் ‘இசுலாமிய பயங்கரவாதம்’ என்று அவதூறு பரப்புவதை பல தலைவர்கள் கண்டித்திருக்கின்றனர்.
இஸ்லாம் குறித்து சர்ச்சை கருத்து – பிரான்ஸ் அதிபருக்கு வலுக்கும் எதிர்ப்பு
துப்பாக்கியால் மிரட்டிய வலதுசாரி வன்முறையாளர் – இஸ்லாமிய பயங்கரவாதி என அவதூறு பிரச்சாரம்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.