Aran Sei

அழகை தீர்மானிப்பது உடல் அல்ல – நடிகை வித்யா பாலன்

லைமுடியின் நீளம், புஜங்களின் தடிமன், உடலின் வளைவுகள், உயரம் குறித்த மக்கள் கருத்துக்களுக்கு நான் கவலைப்படுவதில்லை என்று டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு நடிகை வித்யா பாலன் அளித்த நேர்காணலில் கூறியுள்ளார்.

மேலும், “என்னுடைய செயற்பாடுகள் எனக்கு முக்கியமானவை. நான் சினிமா உலகிற்கு வெளியில் இருக்கும் குடும்பத்திலிருந்து வந்தவள். எல்லா தருணங்களும் நிரந்தமற்றவை என்று சொல்ல எனக்கு யாரும் இல்லை. ஒருகட்டத்தில், என் எடை ஒரு தேசிய பிரச்சினையாக மாறியது. இதுநாள்வரை, நான் ஒரு குண்டு பெண்ணாகவே இருந்து வந்திருக்கிறேன். என்னுடைய ஏறியிறங்கும் எடையானது இனி என்னை எந்தத் தொந்தரவும் செய்யமுடியாத ஒரு கட்டத்தில் நான் இப்போது இருக்கிறேன் என்று நான் சொல்ல மாட்டேன்.” என்று வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.

‘ஒரு பெண்ணாக இருப்பது சோர்வை ஏற்படுத்துகிறது’ – நடிகை அன்னா பென்

“நான் என் வாழ்வில் வெகுதூரங்களை கடந்து வந்துவிட்டேன். என் வாழ்நாள் முழுவதும் எனக்கு ஹார்மோன் தொடர்பான பிரச்சினை இருந்து வந்திருக்கிறது. பல காலங்களாக, நான் என் உடலையே வெறுத்திருந்தேன். என் உடல் எனக்குத் துரோகியாகி, என் எதிரிகளுக்கு என்னைக் காட்டிக்கொடுக்கிறது என்று நினைத்தேன். என் திறமையின் உச்சத்தை நிரூபித்துக்காட்ட வேண்டிய காலக்கட்டம் அது. அந்தத் அழுத்தத்தால், எந்நேரமும் மிதமிஞ்சிய கோபத்துடனும், விரக்கியுடனுமே இருப்பேன்.” என்று தன் நினைவுகளின் இருள் முடிச்சுகளை அவர் அவிழ்த்துள்ளார்.

“என் உடற்செயற்பாடு நின்றுப்போகும் அக்கணம் முதல், நான் இவ்வுலகிலிருந்து இல்லாமல் போவேன் என்பதை உணர்ந்தபோது நான் ஒன்றை கண்டடைந்தேன். அது, என் உடல் மட்டுமே என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது என்பதுதான். அதை முழுமனதாக உணர்ந்து ஏற்றுக்கொண்டேன். என் உடலுக்கு நான் தெரிவிக்க வேண்டிய நன்றிகள் ஏராளம் உள்ளன. இந்த உடலின் காரணமாகதான் நான் உயிருடன் இருக்கிறேன்.” என்று வித்யா பாலன் குறிப்பிட்டுள்ளார்.

‘இந்தியாவில் மனுஸ்மிருதி எதிர்ப்பே, பெண்ணுரிமை போராட்டம்’ – கவிதா கிருஷ்ணன்

“இவ்வுடலானது இரத்தமும் எலும்புகளாலும் ஆனது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தருணமும் நான் என்னை அதிகமாக நேசிக்கவும் ஏற்றுக்கொள்ளவும் ஆரம்பித்துவிட்டேன். ஆனால் அது அவ்வளவு எளிதானதல்ல.  இந்தச் சக்தியானது உங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்றால், அதுதானாக உருவாகி வரும்  வரை, அதைப் போலசெய்து பழகுங்கள். ஒருநாள் உங்களில் அது மலரும்.” என்று தன் நம்பிக்கையை எல்லோருக்கும் ஒளியாக்கியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு ப்ளீம்பேர் விருது விழாவில் பேசிய வித்யா பாலன், “நான் தெற்கே ‘சூனியக்காரி’ என்று அழைக்கப்படுகிறேன். நான் என் உடலை என் வாழ்நாள் முழுவதும் நிராகரித்தே வந்திருக்கிறேன். என்னை நான் ஏற்றுக்கொள்வதற்காகவே, நான் கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறேன். அந்த ஏற்றுக்கொள்ளலானது இன்னும் இன்னுள் முடிவடையவில்லை. இப்போதைக்கு முடிவடையாது. அது இன்னும் நீளும். ஒரு விஷயத்தை மக்கள் புரிந்துக்கொள்வதில்லை. ஒரு குண்டு பெண்ணாக வளரும் பெண்ணுக்கு, தன்னுடலை ஏற்றுக்கொள்ளுதலென்பது  நடவாத ஒரு காரியம்.” என்று கூறியிருந்தார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்