Aran Sei

பீகார்: பசுக்காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்ட இஸ்லாமிய இளைஞன்

பீகார் மாநிலத்தில் இஸ்லாமிய இளைஞன் ஒருவர் பசுக் காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டை ஏற்படுத்தியுள்ள காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அந்த இளைஞரின் உடலை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்க முயன்றதாகவும் பின்னர் அவரது உடலில் உப்பு தெளித்து, அது வேகமாக அழுகும் வகையில் புதைத்ததாகவும்  கூறப்படுகிறது.

அக்காணொளியில், சமஸ்திபூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஐக்கிய ஜனதா தளக் கட்சி உறுப்பினர் முகமது கலீல் ஆலம், தன்மீது தாக்குதல் நடத்துபவர்கள் முன்பு, தன் கைகளைக் கூப்பி இரைஞ்சுவதை காணலாம். அக்காணொளியில், தாக்குதல் நடத்தியவர்களின் முகம் தெரியவில்லை.

‘மாடுகளுக்கு ஆம்புலன்ஸ்; அழைத்த 20 நிமிடங்களில் வரும்’- உ.பி கால்நடை துறை அமைச்சர் அறிவிப்பு

மாடுகள் வெட்டப்படும் இடங்களையும், மாட்டிறைச்சி விற்பனையில் ஈடுபடும் நபர்களின் பெயர்களையும் கூறச் சொல்லி, அந்த இளைஞனை தாக்குதலில் ஈடுபட்டவர்கள் வற்புறுத்துகிறார்கள்.

“நீ உன் வாழ்நாளில் எவ்வளவு மாட்டிறைச்சி உட்கொண்டாய்? உன்னுடைய குழந்தைகளுக்கும் மாட்டிறைச்சி ஊட்டி இருக்கிறாயா? குர்ஆன் மாட்டிறைச்சியை உட்கொள்ள சொல்கிறதா?” என்று அந்த இளைஞரிடம் அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

நேற்று (பிப்பிரவரி 22) இரவு, பீகார் எதிர்க்கட்சித் தலைவரும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவருமான தேஜஸ்வி யாதவ், தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த சம்பவம் தொடர்பான இந்தி செய்திக் குறிப்பை பகிர்ந்து, பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாரைத் தாக்கியுள்ளார்.

“பீகாரின் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக காணாமல் போய்விட்டது. ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவராக இருந்த இஸ்லாமிய இளைஞன் அடித்து, உயிருடன் எரிக்கப்பட்டு, புதைக்கப்பட்டிருக்கிறார். பீகாரில் இதுபோன்ற சம்பவங்கள் ஏன் நடக்கின்றன என்பதை நிதிஷ்குமார் சொல்ல வேண்டும். மக்கள் ஏன் சட்டத்தை கையில் எடுக்கிறார்கள்? என்று அவர் கூற வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

மாடுகளை ஏற்றிச் சென்றதால் இஸ்லாமியர்கள் படுகொலை – நீதித்துறை விசாரணை வேண்டுமென மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தல்

காணாமல் போன முகமது கலீல் ஆலம் குறித்து அவரது குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்த நான்கு நாட்கள் கழித்து, பிப்பிரவரி 18ஆம் தேதி முகமது கலீல் ஆலம் சடலமாக புர்ஹி கந்தக் ஆற்றின் கரையில் இருந்து மீட்கப்பட்டார்.

Source: NDTV

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்