Aran Sei

வாக்கு எண்ணும் தினத்தில் வெற்றி கொண்டாட்டங்களுக்குத் தடை – கொரோனா பரவலை கட்டுப்படுத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை

கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக வாக்கு எண்ணிக்கையின் தினத்திலோ அல்லது அதற்குப் பிறகோ வெற்றிக் கொண்டாட்டங்களுக்குத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

வெற்றிக் கொண்டாட்டங்களின்போது பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவது சாத்தியமில்லை என்பதால் தேர்தல் ஆணையம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கும் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

‘கொரோனா பாதித்த மத்திய படையினரை திரும்ப பெறுக’ – சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை வரவேற்றுள்ள மம்தா பானர்ஜி

கொரோனா அலை பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம் என சென்னை மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதிகள் குற்றம்சாட்டியிருந்தனர். கொரோனா பரவல் அதிகரித்து வந்த சூழ்நிலையில் அரசியல் கட்சிகள் பேரணிகள், கூட்டங்கள் நடத்த அனுமதிக்கப்பட்டதற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதைதொடர்ந்து, வாக்கு எண்ணிக்கையின்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் சில அறிவிப்புகளை நேற்று வெளியிட்டிருந்தது. அதில், “வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கும் அரசியல் கட்சி முகவர்கள், அதிகாரிகள் ஆகியோர் 72 மணி நேரத்திற்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியாவது செய்திருக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்