Aran Sei

‘கல்வியை காவி மயமாக்குவதில் என்ன தவறு?’ -துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கேள்வி

“இந்தியா சுதந்திரம் அடைந்த 75ஆவது ஆண்டில், நாம் மெக்காலே கல்வி முறையை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும். வெளிநாட்டு மொழியை கற்பதற்கு பதிலாக நமது இந்திய மொழிகளை நாம் கற்க வேண்டும். முக்கியமாக நமது அறிவு சுரங்கமான வேதங்களை அறிய சமஸ்கிருதத்தை கற்க வேண்டும்” என்று இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

கர்நாடக பள்ளிப்பாடத்திட்டத்தில் பகவத் கீதை – குஜராத்தை தொடர்ந்து கர்நாடக அரசும் அறிவிப்பு

ஹரித்வாரில் உள்ள தேவ் சமஸ்கிருதி விஷ்வ வித்யாலயாவில் உள்ள தெற்காசிய அமைதி மற்றும் நல்லிணக்க நிறுவனத்தைத் திறந்து வைத்த துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு இவ்வாறு கூறியுள்ளார்.

“இந்தியாவின் கல்வி முறையை இந்திய மயமாக்குவதுதான் புதிய கல்வி கொள்கையின் நோக்கமாகும். மேலும், நமது கல்வியை நாம் காவிமயமாக்குகிறோம் என்று குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் காவியில் என்ன தவறு இருக்கிறது” என்று வெங்கையா நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்து-இஸ்லாமியரிடையே வெறுப்பை தூண்டுவதை தவிர தெலுங்கானாவிற்கு பாஜக வேறு எதையும் செய்ததில்லை – அமைச்சர் ராமாராவ் குற்றசாட்டு

“நூற்றாண்டு கால காலனித்துவ ஆட்சியால் நம்மை நாமே தாழ்த்தப்பட்ட இனமாகப் பார்க்கத் துவங்கினோம். அந்த காலனித்துவ மனப்பான்மையை நாம் கைவிட்டு விட்டு நமது சொந்த அடையாளத்தில் பெருமை கொள்ளக் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

Source : NDTV

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்