Aran Sei

‘இந்து இளைஞர்கள் வாள் ஏந்திச் செல்ல வேண்டும்’ – விஷ்வ ஹிந்து பரிஷத்தின் முக்கிய தலைவர் சாத்வி சரஸ்வதி பேச்சு

காஷ்மீர் பண்டிட்கள் வெளியேற்றப்பட்டது போன்ற சூழ்நிலைகளைத் தவிர்க்க, இந்து இளைஞர்கள் வாள் ஏந்திச் செல்ல வேண்டும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் (விஎச்பி) முக்கிய தலைவர் சாத்வி சரஸ்வதி வலியுறுத்தியுள்ளார்.

நேற்று முன்தினம் (ஏப்ரல் 10) ராமநவமியை முன்னிட்டு, மகாராஷ்ட்ர மாநிலம் துலே நகரில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றியுள்ள சாத்வி சரஸ்வதி, “ஆயுதங்களை வைத்திருப்பது இந்துக்களின் பெருமை. மரியாதை” என்று கூறியுள்ளார்.

பீகார்: மசூதி மேல் காவிக்கொடியை ஏற்றி ராமநவமி கொண்டாடிய வலதுசாரியினர்

காஷ்மீரி பண்டிட்டுகளின் இடம்பெயர்வு குறித்து பேசியுள்ள சாத்வி சரஸ்வதி, “நம்மையும் நம் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் நாளுக்காக காத்திருக்கிறோமா? அந்த நேரத்தில் இந்துக்களும் பிராமணர்களும் ஏன் வாள் எடுக்கவில்லை என கேள்விகள் கேட்கப்படும். நீங்கள் போரில் ஏன் ஈடுபடவில்லை, உங்கள் உரிமைகளுக்காக ஏன் போராடவில்லை?” என்று கேள்விகள் எழும் என்று தெரிவித்துள்ளார்.

“வாளை கையில் எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களால் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள மொபைல் போன்களையும் மடிக்கணினிகளையும் வாங்க முடிந்தால், ரூ. 1,000 மதிப்புள்ள வாளை வாங்கி, கையில் கொண்டு செல்லுங்கள். ஆயுதங்களை வைத்திருப்பது இந்துக்களின் பெருமை, மரியாதை” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இப்படியான கருத்துகளை அவர் சொல்வது முதன்முறையல்ல, கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில், காசர்கோட்டில் நடந்த இந்துத்துவா நிகழ்வு ஒன்றில் பேசிய சாத்வி, கேரளா மக்கள் மாட்டுக்கறி உண்ண கூடாது, அப்படி சாப்பிடும் நபர்களை நாட்டைவிட்டு வெளியே அனுப்ப வேண்டும். அவர்களின் கழுத்தை அறுக்க வேண்டும் என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

Source: PTI

தமிழன்னையை கறுப்பாக வரைந்ததற்கு வலதுசாரிகள் எதிர்ப்பு. தமிழன்னை கறுப்பாக இருக்கலாமா? மக்கள் கருத்து என்ன? 

தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்