Aran Sei

மத்திய பிரதேசத்தில் தேவாலயத்தை இடிக்கப் போவதாக மிரட்டல் விடுத்த விஸ்வ இந்து பரிசத் – குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ள பாதிரியார்

த்திய பிரதேசத்தின் ஜபுவா மாவட்டத்தில், தேவாலயங்களை இடிக்கப்போவதாக விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளதை தொடர்ந்து, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலையிடக் கோரி பாதிரியார் கடிதம் எழுதியுள்ளார்.

மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் ஆளுநர் மங்குபாய் சி பட்டேலுக்கு அவர் அந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் நடைபெற்று வரும் கிறுஸ்துவ எதிர்ப்பு வன்முறை தடுத்தி நிறுத்தி, கிறுஸ்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு குடியரசு தலைவரின் அவசர தலையீடு அவசியம் என பாதிரியார் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் முழுஅடைப்புப் போராட்டம் – டெல்லியில் சாலை,ரயில் போக்குவரத்து முடக்கம்

ஜபுவா மாவட்டத்தில் கட்டாய மதமாற்றம் நடைபெறுவதாக விஸ்வ இந்து பரிசத் அமைப்பு மற்றும் பிற அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்த மாதத்தில் தொடக்கத்தில் புகார் அளித்தனர் என மாவட்ட துணை பிரிவு நீதிபதி எல்.என். கார்க் தெரிவித்துள்ளார்.

”கட்டாயம் மதமாற்றம் போன்ற நடவடிக்கைகள் கண்டறியப்பட்டால், நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களிடம் கூறினோம். ஆனால், உண்மையில் அது போன்ற எதுவும் கண்டறியப்படவில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

”ஜபுவாவின் தாசில்தார்களிடம் இருந்து பாதிரியார்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், பாதிரியார்களின் நியமன ஆணை மற்றும் அதன் கீழ் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்” என டெல்லி சிறுபான்மையினர் சங்கத்தின் முன்னாள் உறுப்பினரும் ஐக்கிய கிறுஸ்துவ மன்றத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளருமா ஏ.சி. மைக்கேல் தெரிவித்துள்ளார்.

சமூக செயல்பாட்டாளர் கடத்திக் கொல்லப்பட்ட விவகாரம் – தேசிய புலனாய்வு முகமை விசாரணைக் கோரும் மணிப்பூர் அரசு

அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் சிறுபான்மையினருக்கு பதிலாக, கிறுஸ்துவ பாதிரியார்களிடம் அவர்களின் மத நம்பிக்கையின் தன்மையை விளக்குமாறு தாசில்தார் அறிவுறுத்தியுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

செப்டம்பர் 17, ஜபுவாவில் உள்ள புராட்டஸ்டன்ட் ஷாலோம் தேவாலயத்தின் உதவி பாதிரியார் பால் முனியா குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலையிடக் கோரி , குடியரசு தலைவருக்கு பெயரிடப்பட்ட கடிதத்தைத் தாசில்தாரிடம் அளித்தார்.

பிராமணர் அல்லாதோரை இயக்குனராக நியமிக்க வேண்டும் – சென்னை ஐ.ஐ.டியிலிருந்து பதவி விலகிய பேராசிரியர் குடியரசுத்தலைவருக்குக் கடிதம்

அதில், ”ஜபுவா மாவட்டத்தில் ஏசு கிறுஸ்து மீது நம்பிக்கை கொண்ட பழங்குடியின மக்களை போலி மதமாற்றம் என்ற பெயரில் பஜ்ரங் தள் மற்றும் விஸ்வ இந்து பரிசத் அமைப்பினர் குறிவைக்கின்றனர். இதனால், அந்த மக்கள் அழுத்தம் மற்றும் அச்சத்துடன் அந்த பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Source : The Wire

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்