Aran Sei

அரசு கட்டுப்பாட்டில் இருந்து கோவில்களை விடுவிக்க சட்டம் இயற்ற வேண்டும் – விஸ்வ இந்து பரிஷத் தீர்மானம்

ரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் மற்றும் மடங்களை,  அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டுமென, வலதுசாரி அமைப்பான விஸ்வ ஹிந்து பரிஷத்  கோரியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

குடிகளின் நலன் காக்கும் அரசிற்கு மக்கள் தொகை பெருக்கம்: வரமா? சாபமா?

மேலும்,  கட்டாய மதமாற்றத்தை தடுக்கும் வகையில் நாடுமுழுவதும் சட்டம்  இயற்றப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.

டெல்லி மாநிலம் ஃபரிதாபாத்தில் நடந்த,  அந்த அமைப்பின் அறங்காவலர்கள் மற்றும்  குழு உறுப்பினர்கள் கூட்டத்தில், இதுகுறித்து தீர்மானம் இயற்றியுள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவிக்கபட்டுள்ளது.

இந்தியாவை சேர்ந்த 40 பத்திரிகையாளர்கள் வேவு பார்க்கப்பட்டனர் – சர்வதேச பத்திரிகைகள் நடத்திய புலன்விசாரணையில் அம்பலம்

இந்நிலையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவ்வமைப்பை சார்ந்த அலோக் குமார்,”பல  கோவில்கள் மற்றும்இந்து மத நிறுவனங்கள் பல மாநிலங்களில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. குறிப்பாக தமிழ்நாடு,கர்நாடகா,கேரளா ,உத்தரகண்ட்  ஆகிய மாநிலங்களில் இவ்வாறு உள்ளது ” என்று கூறியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், “ஒரு கோவிலின் பூசாரி யார் என்று அரசாங்கம் ஏன் தீர்மானிக்க வேண்டும், ஒரு கோவிலில்   பூஜையை  ஏற்பாடு செய்வதை  அரசாங்கம் எவ்வாறு முடிவு செய்ய முடியும்” என அவர் கேள்வி எழுப்பியதாக  தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில்  கூறப்பட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்