பீகார் மாநிலத்தில் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் மிகவும் திறனற்ற வகையில் பயன்படுத்தப்பட்டு வருவதாக அம்மாநில காவல் துறை கூடுதல் இயக்குனர் அனில் கிஷோர் யாதவ் தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அவர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாகவும் அந்தச் செய்தி கூறியுள்ளது.
கடந்த மார்ச் 17 அன்று வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், கடந்த ஆண்டு எஸ்சி/ எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகளில், 23விழுக்காடு வழக்குகளில் மட்டுமே இறுதி அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 19 விழுக்காடு வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதகவும், 81விழுக்காடு வழக்குகளில் குற்றவியல் தண்டனை சட்டம் பிரிவு 41A வின் கீழ் நோட்டீஸ் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது.
இந்தியாவில் பாலியல் வன்கொடுமை வழக்குகள் – குற்றவாளியையே திருமணம் செய்ய நிர்ப்பந்திக்கும் நீதிமுறை
பெரும்பாலான வழக்குகளில் பிணையில் வரவியலாத சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவதற்கு பதிலாக, குற்றவியல் தண்டனை சட்டம் பிரிவு 41A வின் கீழ் தவறாகப் பதியப்பட்டுள்ளதெனச் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.
எஸ்சி/எஸ்டி வன்கொடுமை வழக்குகளில் குற்றவியல் தண்டனை சட்டம் பிரிவு 41A கீழ் நோட்டீஸ் அனுப்புவது பயனளிக்காது என்றும், அது கைது செய்யத் தேவையில்லாத குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஆஜராக மட்டுமே பதியப்பட வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் கூறியுள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது.
பட்டியலினத்தவரை காலணியால் அடித்த தொழிலதிபர் – வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு
மேலும், இந்த அறிக்கையானது பீகார் மாநில உள்துறையின் நடவடிக்கைகளையும் சுட்டி காட்டியுள்ளது என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.