Aran Sei

வேலூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் உயிரிழந்த விவகாரம் – மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்.

வேலூர் மாவட்டம் அடுக்கும்பாறை அரசு மருத்துவமனையில் 7 நோயாளிகள் உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவ கல்வி இயக்குநர், மருத்துவ கல்லூரி டீன் ஆகியோருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதற்கு இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்குமாறு அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வேலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையில் இருந்தவர்கள் உயிரிழப்பு : ஆக்சிஜன் பற்றாக்குறை என உறவினர்கள் புகார்

வேலூர் அடுக்கும்பாறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட  பழுது காரணமாக 7 நோயாளிகள் உயிரிழந்தது குறித்து வெளியான செய்தியின் அடிப்படையில் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.

கொரோனா சிகிச்சைக்காக அடுக்கும்பாறை அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டிருந்த 4 பேர் உள்ளிட்ட 7 நோயாளிகள், ஏப்ரல் 20 ஆம் தேதி உயிரிழந்திருந்தனர். இதற்கு ஆக்சிஜன் பற்றாக்குறை தான் காரணம் என நோயாளிகள் தரப்பில் இருந்து குற்றம் சாட்டப்பட்டது.

 

Source: News18

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்