நேற்று (பிப்ரவரி 25) மாலை மும்பையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகில் வெடிபொருளான ஜெலட்டின்களால் நிரப்பப்பட்ட கார் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
“கார்மைக்கேல் சாலையில் உள்ள அம்பானியின் வீட்டின் அருகில் இந்த வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது. வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் குழு (பிடிடிஎஸ்) குழு உடனடியாக அந்த இடத்திற்குச் சென்றனர். உடனடியாக வெடிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டதல்ல என்று கண்டறியப்பட்டது. மேலும், இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.” என்று மகாராஷ்ட்ரா காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அம்பானியின் அடுக்குமாடி இல்லத்திலிருந்து சிறிது தொலைவில் ஸ்கார்பியோ கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது என்றும் இதுகுறித்து மும்பை காவல்துறையின் குற்றப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது என்றும் மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக, மும்பை காவல்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “மும்பை கார்மைகேல் சாலையில், கம்தேவி காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் முகேஷ் அம்பானியின் வீட்டின் முன் சந்தேகத்து இடமாக சொகுசு கார் ஒன்று நின்றிருந்தது. இதுகுறித்த தகவல் கிடைத்ததும் உடனடியாக காவல்துறை குழு அப்பகுதிக்கு விரைந்தது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
A suspicious vehicle was found on Carmichael Rd this evening under limits of Gamdevi Pstn. BDDS & other Police teams reached the spot immediately, examined & found some explosive material Gelatin inside. It’s not an assembled explosive device. Further investigation is going on.
— Mumbai Police (@MumbaiPolice) February 25, 2021
மேலும், “காரை சோதனையிட்டபோது உள்ளே ஜெலட்டின் குச்சிகள் இருந்தன. ஆனால் அவற்றை வெடிக்கச் செய்யக்கூடிய டெட்டனேட்டர்கள் அதில் இணைக்கப்படவில்லை. இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடைபெறுகிறது.” என்று கூறப்பட்டுள்ளது.
Source : PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.