Aran Sei

சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற பிரார்த்தனை – திண்டுக்கல் கோவிலில் வீரப்பனின் மனைவி பூஜை

மிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற சந்தன கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி பிரார்த்தனை செய்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காளி கோவிலில் அவர் இந்தப் பிரார்த்தனையை மேற்கொண்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விழா ஒன்றில் பேசிய முத்துலட்சுமி, 10.5 விழுக்காடு இட ஒதக்கீடு அளிப்பதன் மூலம், வன்னியர்களை அதிமுக அரசு ஏமாற்ற முடியாது என தெரிவித்ததாக, தி இந்து கூறியுள்ளது.

இந்தியாவில் மறைமுக நெருக்கடி நிலை நிலவுகிறது – சிவ சேனா எம்.பி சஞ்சய்ரவுட் கருத்து

இட ஒதுக்கீடு அவசர காலத்தில் அறிவிக்கப்பட்டது எனக் கூறிய முத்துலட்சுமி, பாமக தேர்தலில் செய்யும் திரைமறைவு ஒப்பந்தத்திற்காகவே தோற்கடிக்கப்பட வேண்டும் என கோவிலில் உறுதிமொழி எடுத்துக் கொண்டேன் என கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவினரின் செயல்களை முறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆன்மா ஒரு போதும் மன்னிகாது என்றும் அவர் கூறியுள்ளதாக, தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்