Aran Sei

‘காங்கிரஸுக்கு உடனடியாக ஒரு அறுவை சிகிச்சை தேவை; கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டும்’ – வீரப்ப மொய்லி

காங்கிரஸ் கட்சியில் உடனடியாகமேஜர் சர்ஜரி‘ (அறுவை சிகிச்சை) செய்யப்பட வேண்டும் என்றும் அதற்கு இதுதான் சரியான தருணம் என்றும் அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான வீரப்ப மொய்லி வலியுறுத்தியுள்ளார்.

நேற்று (ஜூன் 10), பெங்களூருவில் வீரப்ப மொய்லி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, “2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு, காங்கிரஸ் கட்சி சுணக்கம் கண்டுள்ளது. இடைகாலத் தலைவராக சோனியா காந்தி இருந்தாலும், பாஜகவை எதிர்க்கொள்ளும் வகையில் வலிமையான தலைமை இல்லாததால், அமைப்பு ரீதியாக கட்சி சோர்வடைந்து இருக்கிறது.” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

“ஆகவே, காங்கிரஸ் கட்சியில் மேஜர் சர்ஜரி செய்தாக வேண்டும். அதைக் காலம் தாழ்த்தாமல், இன்றே உடனடியாக மேற்கொள்ள வேண்டும். காரணம், அடுத்த ஆண்டு ஏழு மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலும் வரவுள்ளது. அந்த ஏழு மாநில தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி பெரிய வெற்றிப் பெறாவிட்டால், மக்களவைத் தேர்தலில் கட்சிக்கு கடும் பாதிப்பு ஏற்படும்.” என்று அவர் எச்சரித்துள்ளார்.

‘தோல்வியிலிருந்து இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்’ – காங்கிரஸ் கட்சினருக்கு சோனியா அறிவுரை

“அதனால், காங்கிரஸ் கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சியாக வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இச்சூழலில் கொள்கையில் உறுதியோடு இருப்பவர்களுக்குக் கட்சி மேலிடம் முன்னுரிமை அளிக்க வேண்டும். கட்சி தலைமைக்கு நெருக்கமானவர்கள், பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என பார்த்து வாய்ப்பு வழங்கினால் மீண்டும் கட்சிக்கு பாதிப்பே ஏற்படும்.” என்று வீரப்ப மொய்லி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “காங்கிரஸ் கட்சியில் உள்ள பதவிகள் முறையாக மறுசீரமைப்பு செய்யப்பட்டு, திறமையற்றவர்களை நீக்கி, கட்சியில் கொள்கை பிடிப்பு உள்ளவர்களுக்கும், ஆக்ரோஷமாக செயல்படும் இளைஞர்களுக்கும் பதவி வழங்க வேண்டும் என்றும் அர்ப்பணிப்பு, களப்பணி, அனுபவம் உள்ளவர்களை ஒருபோதும் புறக்கணிக்காது, ஆங்கிலத்தில் பேசுவதாலே பதவி கொடுப்பதைக் கைவிட வேண்டும் என்று வீரப்ப மொய்லி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

source; pti

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்