Aran Sei

’திமுகவுக்கு காங்கிரஸ் செலவல்ல வரவு; தொகுதி பங்கீட்டில் திமுக எங்களுக்கு அநீதி இழைக்காது’ – வீரப்ப மொய்லி

காங்கிரஸ் நிச்சயம் திமுக-வுக்கு செலவாக அல்லாது வரவாக இருக்கும் என்றும் தொகுதி பங்கீட்டில் திமுக எங்களுக்கு அநீதி இழைக்காது என்றும் கர்நாடக முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தமிழக மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் பார்வையாளர்களில் ஒருவராக கர்நாடக முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான வீரப்ப மொய்லி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.

’தான் ‘ முதல்வர் வேட்பாளர்’ என்று பழனிசாமி மட்டும் தான் சொல்லிக்கொண்டிருக்கிறார்’ – ஸ்டாலின்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் தமிழகத்தை குறி வைத்து காய்களை நகர்த்துகின்றனர். ஆனால், தமிழகத்தை ஆண்டகாங்கிரஸ், எந்த அழுத்தமான முயற்சியும் எடுத்தது போல தெரியவில்லையே?

தமிழகத்தில் ஆக்கப்பூர்வமான அரசியலை முன்னெடுக்காமல் வெறுப்பரசியலை பேசி பாஜக வளர பார்க்கிறது. புதுச்சேரியில் ஆளுநர் வாயிலாக சட்டத்துக்கு புறம்பாக முதல்வர் நாராயணசாமிக்கு தொல்லை கொடுத்து வருகிறது. தமிழகத்தில் ஆளுமை மிக்க தலைவர்களாக விளங்கிய கருணாநிதியும், ஜெயலலிதாவும் இல்லாத சூழலை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்த முயற்சிக்கிறது. பாஜக.வின் இந்தச் சதி அரசியலை அதிமுக புரிந்து கொள்ளாமல் இருக்கிறது.

`குஜராத் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கிய பாஜக’ – வீடியோ ஆதாரம் வெளியிட்ட காங்கிரஸ்

எங்களது மாவட்ட, மாநில அளவிலான தலைவர்களை ஒருங்கிணைத்து, முறையாக அமைப்பைக் கட்டமைத்தால் காங்கிரஸ் புத்துயிர் பெற்றுவிடும். ராகுல் காந்தி பொங்கலுக்கு தமிழகத்துக்கு வந்தது போல, இனி அடிக்கடி வருவார். மீண்டும் காங்கிரஸ் வலுப்பெறும்.

தற்போதைய திமுக தலைவர் ஸ்டாலினிடம் எத்தனை இடங்களை கேட்க போகிறீர்கள்?

முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் எனக்கு அரசியலை தாண்டி நல்ல உறவு இருந்தது. இருவரும் எழுத்தாளர்கள் என்பதால் மனதளவில் நெருக்கமாக இருந்தோம். தற்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடனும் நல்ல நட்பு இருக்கிறது. அடுத்த முதல்வராக வருவதற்கான அனைத்து தகுதிகளும் ஸ்டாலினுக்கு வந்துவிட்டது. நாங்கள் எத்தனை தொகுதிகளில் போட்டியிட போகிறோம்? எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறோம் என்பதை எல்லாம் இப்போது கூறுவது சரியாக இருக்காது.

முதல்வர் நேர்காணல்: ‘ஊழல் புகார் விவாதத்திற்கு நான் தயார், ஸ்டாலின்தான் சாக்கு சொல்லி தப்பிக்கிறார்’

கடந்த தேர்தலை போல காங்கிரஸூக்கு 40-க்கும் மேற்பட்ட இடங்களை இந்த தேர்தலில் தரக்கூடாது என்று திமுக நிர்வாகிகள் மட்டத்தில் பேச்சு அடிபடுகிறதே?

காங்கிரஸின் பாரம்பரிய பலத்துக்கு ஏற்றவாறு, நியாயமான எண்ணிக்கையில் இடங்களை பெறுவோம். இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்பதை மட்டும் மனதில் வைத்து பணியாற்றுமாறு காங்கிரஸ் மேலிடம் எங்களுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறது. காங்கிரஸ் நிச்சயம் திமுக.வுக்கு செலவாக இருக்காது. வரவாக இருக்கும். எனவே, தொகுதி பங்கீட்டில் திமுக எங்களுக்கு அநீதி இழைக்காது என்று நம்புகிறோம்.

காந்தியை ‘பாகிஸ்தானின் தந்தை’ என்று கூறிவருக்கு பேராசிரியர் பதவி

அப்படியென்றால் திமுக கொடுக்கும் குறைந்தப்பட்ச இடங்களை அப்படியே வாங்கி கொள்வீர்களா?

தமிழகத்தில் எங்கள் கூட்டணிக்கு திமுக தலைமை வகிப்பதைப் போல, புதுச்சேரியில் எங்கள் கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை வகிக்கிறது. இங்கு திமுக தலைமையிலும், அங்கு காங்கிரஸ் தலைமையிலும் ஆட்சி அமைக்க வேண்டும். அதற்காக நாங்கள் எல்லா விதத்திலும் பாடுபடுவோம். தமிழகத்தில் நாங்கள் எந்தெந்த தொகுதிகளில் பலமாக இருக்கிறோமோ, அதையெல்லாம் கேட்டுப் பெறுவோம்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்