Aran Sei

மாட்டுச் சாணத்தில் உருவாக உள்ள வேதிக் பெயிண்ட் – மத்திய அமைச்சர் அறிவிப்பு

நெடுங்சாலை மற்றும் குறு சிறு நடுத்தர நிறுவனங்களுக்கான மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மாட்டு சாணத்தால் பெயிண்ட் தயாரிக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளார்.

கழுதை சாணத்தைப் பயன்படுத்தி போலி மசாலா – இந்து யுவ வாஹினி மண்டல பொறுப்பாளர் கைது

கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் விவசாயிகள் கூடுதல் வருமானத்தை பெறுவதற்கும் காதி மற்றும் கிராம தொழில் வாரியம் மூலமாக, மாட்டு சாணத்தைக் கொண்டு பெயிண்ட் தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளார். அதற்கு வேதிக் பெயிண்ட் (Vedic paint) என பெயரிடப்பட்டுள்ளது என நிதின் கட்கரி தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும் இந்த பெயிண்ட் விஷத்தன்மை, பாக்டீரியா ஆகியவற்றிற்கு எதிராக செயல்படும் திறன் வாய்ந்தது எனவும் இந்த பெயிண்டை சுவரில் அடித்தால் நான்கு மணி நேரத்திற்குள்ளாகவே காய்ந்து விடும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார் என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், மாடு மற்றும் கால்நடைகளை வீட்டில் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இதனால் ஆண்டுதோறும் கூடுதலாக 55,000 ரூபாய் வருமானம் கிடைக்கும் என அவர் கூறியுள்ளார்.

மாட்டுச் சாண சிப் குறித்த ஆய்வு முடிவுகள் எங்கே? அறிவியலாளர்கள் கேள்வி

ஒடிஷாவைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் பிரதாப் சாரங்கி, வேதிக் பெயிண்ட் திட்டத்தை வரவேற்றுள்ளார். மிகவும் பிரச்சனைக்குரிய விஷயமாக இருக்கும் காலநிலை மாற்றங்கள் இருக்கும் சரியான தருணத்தில் வேதிக் பெயிண்ட் வந்துள்ளது என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

காதி மற்றும் கிராம தொழில் வாரியம், இதுபோல் இன்னும் பல புதுமையான தயாரிப்புகளை வரும் காலங்களில் தொடங்க திட்டமிட்டிருக்கிறது என தி ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்