Aran Sei

‘தலித்விரோதப்போக்கை கையாளும் காவல்துறை’ – ஆதிதிராவிடர்கள் குறிவைத்து கைதுசெய்யப்படுவதாக வன்னி அரசு குற்றச்சாட்டு

லித் விரோதப்போக்கை தமிழ்நாடு காவல்துறை கையாண்டு வருகிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக, இன்று (செப்டம்பர் 26), வன்னி அரசு பதிவிட்டுள்ள டிவீட்டில், “ரவுடிகள் தேடுதல் பெயரில் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் தலித் விரோதப்போக்கை காவல்துறை கையாண்டு வருகிறது. விடுதலைச்சிறுத்தைகள் மற்றும் ஆதிதிராவிடர்களை குறிவைத்து விசாரணை எனும் பெயரில் கைதுசெய்வது கண்டனத்துக்குரியது.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இது போலீசா அல்லது சாதிவெறியர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று (செப்டம்பர் 25), தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த காணொளியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், செப்டம்பர் 29 ஆம் தேதி, சாதிவெறிக்கு துணைபோகும் காவல்துறையின் போக்கை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்