Aran Sei

ஒன்றிய அரசின் ஓபிசி பட்டியலில் இடம்பெறாத பிற்படுத்தப்பட்ட சாதிகள் – உரியநடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு விசிக வேண்டுகோள்

ன்றிய அரசின் ஓபிசி பட்டியலில் இடம்பெறாத பிற்படுத்தப்பட்ட சாதிகளை அந்தப் பட்டியலில் சேர்க்க  நடவடிக்கை  வேண்டுமென  தமிழ்நாடு அரசுக்கு  விடுதலை  சிறுத்தைகள்  கட்சி  வேண்டுகோள்  விடுத்துள்ளது.
இதுகுறித்து  அக்கட்சியின்  பொது  செயலாளரும் விழுப்புரம் நாடாளுமன்ற  உறுப்பினருமான  ரவிக்குமார்   வெளியிட்டுள்ள  அறிக்கையில்,  “தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள சாதிகளில் சேர்வை, ஆயிர வைசியர் உள்ளிட்ட சில சாதிகள் ஒன்றிய அரசின் இதர பிற்படுத்தப்பட்டோர் சாதிகளின் பட்டியலில் (OBC) இடம் பெறவில்லை”  என்று  குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தற்போது மாநில அரசுகளுக்கு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் மாற்றம் செய்யும் அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. எனவே இவ்வாறு ஒன்றிய அரசின் பட்டியலில் இடம்பெறாத சாதிகளைச் சேர்ந்த மாணவர்கள் பொதுப்பட்டியலைச் சேர்ந்தவர்களாகக்  கருதப்படுவதால் மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் சேர்வது சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறது என்றும் அந்த  அறிக்கையில்  ரவிக்குமார் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் சார்பில் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த மாணவர்களின் எதிர்காலத்தைக் காப்பாற்ற வேண்டும் என விடுதலை  சிறுத்தைகள்  கட்சி  வேண்டுகோள்  விடுத்துள்ளதாக  விழுப்புரம் நாடாளுமன்ற  உறுப்பினர்  ரவிக்குமார்   அந்த  அறிக்கையில்  கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்