Aran Sei

திரிபுரா வன்முறை: கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் அழைப்பு

மனுஸ்மிருதிக்கு எதிரான போராட்டத்தில் திருமாவளவன் - Image credit - thewire.in

திரிபுரா மாநிலத்தில் இடதுசாரிகள் மற்றும் இசுலாமியர்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்த ஆர்ப்பாட்டம், இன்று(நவம்பர் 23) மாலை 3 மணிக்கு, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒருங்கிணைக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள ஒன்றிய அரசு – நிகழப்போவது என்ன?

வங்கதேசத்தில் நடந்த வன்முறைக்கு எதிராக அக்டோபர் 26 அன்று, திரிபுராவில் உள்ள சாம்தில்லாவில் விஸ்வ இந்து பரிஷத் நடத்திய பேரணியின் போது ஒரு மசூதி தாக்கப்பட்டதுடன், இரண்டு கடைகளுக்கு தீ வைக்கப்பட்டது. அருகிலுள்ள ரோவா பஜாரில் இஸ்லாமியர்களுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் மூன்று வீடுகளும் சில கடைகளும் சூறையாடப்பட்டதாக காவல்துறை கூறியிருந்தது.

இவ்வன்முறைகள் குறித்து புகார் அளித்ததற்காகவும், அது குறித்து எழுதியதற்காகவும், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ், பத்திரிகையாளர்கள் உட்பட 102 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாக திரிபுரா காவல்துறைக்கு இந்திய பத்திரிகையாசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் வன்முறைக்கும் கண்டனம் தெரிவித்தன.

‘சேலம் எட்டு வழி சாலைக்காக நிலம் கையகப்படுத்தலுக்கு அடிப்படையாக இருக்கும் சட்டத்தை ரத்து செய்க’- திருமாவளவன்

திரிபுரா மாநிலத்தில் தொடர்ந்து வன்முறை சம்பவங்களில் பாஜக ஈடுபாட்டு வருவதாக குற்றஞ்சாட்டி, நவம்பர் 20 அன்று, பாஜகவைச் சேர்ந்த திரிபுரா மாநில முதலமைச்சர் பிப்லப் குமார் தேப் கலந்துக்கொண்ட கூட்டத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் சயோனி கோஷ் தலைமையில் அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதைத்தொடர்ந்து, முதலமைச்சரின் கூட்டத்திற்கு இடையூறு செய்ததாக கூறப்பட்டதோடு, கொலை முயற்சி குற்றச்சாட்டின் கீழ், சயோனி கோஷை திரிபுரா காவல்துறை கைது செய்தது.

கைதுக்குப் பின் சயோனி கோஷ் கொண்டு வரப்பட்ட கிழக்கு அகர்தலா மகளிர் காவல் நிலையத்திற்கு வெளியே பாஜக தொண்டர்களால், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் கடுமையாக தாக்கப்பட்டதாக அக்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டினர்.

வேளாண் சட்டங்கள் திரும்பப் பெற்றதற்கு பாஜகவினரின் தோல்வியே காரணம்’ – உமா பாரதி

திரிபுரா வன்முறைளை கண்டித்து 12க்கும் மேற்பட்ட திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் உள்ள ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அலுவலகத்திற்கு வெளியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, தொடரும் திரிபுரா வன்முறை சம்பவங்களை டெல்லிக்கு எடுத்துச் செல்ல  திரிணாமூல் காங்கிரஸ் கட்சி முடிவு செய்து, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளது. ஆனால், சந்திப்பிற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

தனது டெல்லி பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து திரிபுராவில் அதிகரித்து வரும் வன்முறை தொடர்பான பிரச்சனைகளை எழுப்புவேன் என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி கூறியிருந்தார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்