Aran Sei

சோகனூர் சாதியப் படுகொலை: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 1 கோடி நிவாரணம் வேண்டும் – அரசிடம் கோரிக்கை விடுத்த திருமாவளவன்

ரக்கோணத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த இளைஞர்கள் இரட்டைப் படுகொலையைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சோகனூரில் தலித்துகள் இரட்டைப் படுகொலை – நடந்தது என்ன?

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், சோகனுர் பகுதியில் ஆதிக்க சாதியினரால் இரண்டு தலித் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர், இதுகுறித்து 8 பேர்மீது எஸ்.சி / எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்றைய தினம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்த விடுதலை சிறுத்தைகளின் கட்சியின் தலைவர் திருமாவளவன் இறந்த இளைஞர்களின் குடும்பத்திற்கு தலா 1 லட்சம் காசோலையையும் வழங்கியுள்ளார்.

சோகனூர் தலித் இளைஞர்கள் கொலை: மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்

இதுகுறித்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் முன்னர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இரட்டைப் படுகொலைக்கு நீதி வேண்டியும், குற்றவாளிகளைக் கைதுசெய்ய வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தலைவர் திருமாவளவன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரக்கோணத்தில் தலித் இளைஞர்கள் படுகொலை – குற்றவாளிகளை உடனடியாக கைது செய்க : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தொல்.திருமாவளவன் , “தமிழக அரசு வன்கொடுமை தடுப்பு சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும், அதிமுக பாமக சாதிவெறி கும்பல் திட்டமிட்டு இந்தப் படுகொலையை நடத்தியுள்ளது, தமிழக அரசு இறந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா 1 கோடி ரூபாய் வழங்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்