Aran Sei

தனியார் மயமாகும் பொதுத்துறை வங்கிகள் – ஊழியர்களின் வேலை நிறுத்தத்திற்கு திருமாவளவன் ஆதரவு

பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கும் பாஜக அரசின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைக்கு எதிராக வங்கி ஊழியர்கள் நடத்தவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முழுமையாக ஆதரிக்கிறோம் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, இன்று (மார்ச் 13) அவர் வெளியிட்ட அறிக்கையில், “மத்திய மாநில அரசுகளின் திட்டங்களைச் செயல்படுத்துவதிலும்; விவசாயிகள், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் முதலானோருக்கான கடன்கள், மாணவர்களுக்கான கல்விக் கடன்கள் வழங்குவதிலும் பொதுத்துறை வங்கிகளே முன்னணியில் நிற்கின்றன. தனியார் வங்கிகள் நகர்ப்புறங்களில் மட்டுமே செயல்படும்போது கிராமப்புற கிளைகளின் மூலம் பொதுத்துறை வங்கிகள்தான் ஏழை எளிய மக்களுக்குச் சேவை செய்து வருகின்றன.” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கார்ப்பரேட் வங்கிகள் பொருளாதார ஆபத்தை விளைவிக்கும்- நிதி ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை

மேலும், “ஏற்கெனவே 14 பொதுத்துறை வங்கிகள் ஒருங்கிணைக்கப்பட்டதால் வங்கிச் சேவை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலும் இரண்டு பொதுத்துறை வங்கிகளைத் தனியாரிடம் கொடுக்கப் போவதாக நிதிநிலை அறிக்கையில் மோடி அரசு அறிவிப்புச் செய்துள்ளது.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இதனால் பல்லாயிரக்கணக்கான வங்கி ஊழியர்கள் வேலை இழக்கும் ஆபத்து ஏற்பட்டிருப்பதோடு பொதுமக்களுக்கான வங்கிச் சேவையும் சீர்குலையும் சூழல் உருவாகியுள்ளது. இதைக் கண்டித்து பொதுத்துறை வங்கிகளைப் பாதுகாக்கும் நோக்கோடு எதிர்வரும் 15, 16 ஆகிய இரு தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக வங்கி ஊழியர் அமைப்புகள் அறிவிப்புச் செய்துள்ளன.” என்று திருமாவளவன் நினைவூட்டியுள்ளார்.

“சோசியலிசம் என்பது சுமை; பொதுத்துறை நிறுவனங்களை விற்பதே எங்கள் நோக்கம்” – நிர்மலா சீதாராமன்

“இந்தப் போராட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. தனியார்மயக் கொள்கையைக் கைவிட வேண்டும் என்றும் கார்ப்பரேட்டுகளுக்கு சேவகம் செய்யும் போக்கை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் மத்தியில் ஆளும் பாஜக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.” என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்