Aran Sei

தன்பாலினத்தவர் திருமணத்திற்கு ஆசீர்வாதம் வழங்க இயலாது – வாடிகன் தேவாலயம்

வாடிகன் தேவாலய பாதிரியார்கள் மற்றும் திருச்சபை ஊழியர்கள் ஓரினசேர்க்கையாளர் அமைப்புகளை ஆசிர்வதிப்பதில்லை என்றும் அது திருச்சபை நம்பிக்கைக்கு உட்படாதது என்றும் தெரிவித்துள்ளது.

நேற்று ,வாடிகன் நம்மிக்கை சபை அலுவலகம் தெரிவித்த செய்தியில் திருச்சபைகள் ஓரின சேர்க்கையாளர் திருமணங்களை அங்கீகரிப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளது.

பாலியல் தொந்தரவு செய்யும் பாதிரியார்களைக் காப்பாற்றும் வாடிகன்

இதுகுறித்து தெரிவித்துள்ள போப் பிரான்சிஸ் ” நேர்மைக்கேடான தீண்டாமையை ஊக்குவிக்கும் எண்ணமில்லை என்றும், ஆனால் சடங்கின் உண்மையை உணர்த்த விரும்புவதாக அவர் வாடிகன் நம்மிக்கை சபை அலுவலகத்தின் கருத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

ஓரினசேர்க்கையாளர்கள் திருமணம்குறித்து தெரிவித்த நம்மிக்கை சபை அலுவலகம், ஆண் மற்றும் பெண் திருமணத்திற்கு சடங்கு உள்ளது என்றும், சடங்கு சார்ந்ததற்கே ஆசீர்வாதம் வழங்க இயலும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

கொரோனாவால் உயிரிழந்த இஸ்லாமியர்கள் உடல்கள் தனித் தீவில் அடக்கம் – இலங்கை அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு

எனவே , ஓரினசேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு ஆசீர்வாதம் வழங்க இயலாது என்றும் வாடிகன் கோட்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.

SOURCE: REUTERS 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்